என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா குண்டு வெடிப்பு"

    • எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
    • இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று காலை நடை பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த வெடி விபத்து எதிரொலியாக, கொச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கேரள வெடி விபத்து தொடர்பாக மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அப்போது வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்லும்படி அமித்ஷா உத்தரவிட்டார்.

    மேலும், வெடி விபத்து குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டுமென என்.ஐ.ஏ.க்கு உத்தரவிட்டார்.

    • ஐ.இ.டி. வகை குண்டு நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கேரளா மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ கூட்டரங்கில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்களும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த வகை குண்டை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    இதன் மூலம் கேரளாவில் பயங்கரவாதிகள் நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்கிற சதி திட்டத்துடன் அங்கு முன்கூட்டியே முகாமிட்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் டிபன்பாக்ஸ் குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து இதற்கு முன்பு நடைபெற்ற டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஐ.இ.டி. வகை குண்டு நாச வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வகை குண்டுகள் வீட்டிலேயே தயாரிக்கப்படுபவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து குண்டு வைத்தவர்கள் கேரளாவில் முகாமிட்டு அங்கேயே வெடிகுண்டை தயாரித்தார்களா? இல்லை வேறு பகுதியில் வெடிகுண்டை தயாரித்து அதனை கேரளாவுக்கு எடுத்துச் சென்று வெடிக்க செய்தார்களா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் கேரள போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    குண்டுவெடிப்பு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே அது எந்த வகை குண்டு என்பதை கண்டறிந்துள்ள அதிகாரிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு பிடிக்க வலை விரித்துள்ளனர்.

    • வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை கண்டறிந்துள்ளனர்.
    • குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து.

    கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று காலை நடை பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை கண்டறிந்துள்ளனர்.

    இதுதொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற கார் குறித்தும் அதில் சென்றவர்கள் யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 8 பேர் தேசிய பாதுகாப்பு படை கேரளா விரைந்துள்ளது. இன்று மாலை கேரளா சென்றடைந்து விசாஒணை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேளர டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்.
    • கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இன்று காலை 9 மணியளவில் கிறிஸ்துவ கூட்டரங்களில் 3 குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்நிலையில், நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

    மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

    இதற்காக, முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இருந்து கேரளா விரைந்துள்ளார்.

    குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. 

    • 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு.
    • குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

    கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா'ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலும், 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக, நான் தான் குண்டு வைத்தேன் என்று கூறி சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரளாவை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மார்ட்டினை ரகசிய காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், மார்ட்டின் போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், " ஜெஹோவா'ஸ் விட்செனசஸ் சபையின் போதனைகள் மீது தனக்கு உடன்பாடு இல்லை. அச்சபையின் கருத்துகள் தேசத்திற்கே ஆபத்தானது.

    தனது புகார்களை அச்சபை கண்டுகொள்ளவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜெஹோவா விட்னெசஸ் என்பது கிறிஸ்தவ மதத்தில் மிகச்சிறிய பிரிவு ஆகும். இந்த பிரிவை உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரார்த்தனை கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • படுகாயத்துடன் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு 'யெகோவாவின் சாட்சிகள்' என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதன் கடைசி நாளான நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, எடப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டு மையத்தில் காலை 9.45 மணி அளவில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் மொத்த அரங்கமே அதிர்ந்தது.

    இதை சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். பெண்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினர்.

    உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடியதால் அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கே பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

    இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்த சில வினாடிகளிலேயே அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் 2 இடங்களில் தீ பிடித்தது. இதில் அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் பற்றி எரிந்தன.

    குண்டு வெடிப்பில் சிக்கியும், தீயில் சிக்கியும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆடைகளில் தீ பிடித்து எரிந்ததால் மக்கள் தரையில் படுத்து உருண்டனர். அதேநேரம் சிலரது உடலில் தீ பற்றிக்கொண்டதால் அணைக்க முடியாமல் திணறினர். இதைப்பார்த்த சிலர் அவர்களை மீட்க போராடினர்.

    அடுத்தடுத்து வெடித்த இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி லிபினா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் 51 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அதில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த குமாரி (வயது 53) என்ற பெண் பின்னர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

    குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் 95 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கேரள எல்லையில் உள்ள வனத்துறையினரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    கேரளாவில் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

    படுகாயம் அடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

    கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று நாடுமுழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் அதிரடியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கு தப்பி வர வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்புக்கும், கண்காணிப்புக்கும் உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

    இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்ட எல்லைகளில் நேற்று கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக கண்காணிப்பு பணிகள் தொடர்ந்தன. மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட்டுகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடந்து வருகிறது.

    மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களும் சோதிக்கப்பட்டன. செக் போஸ்டுகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் கூடுதல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கண்காணிப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாவட்டங்களும் கேரள எல்லையில் அமைந்து இருப்பதால் இன்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கேரள ஜெப கூட்டத்தில் கைவரிசை காட்டியது போல தமிழகத்திலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நடப்பதால் அதன் தாக்கத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாமா என்ற சந்தேகமும் விசாரணை குழுக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

    எனவே யூதர்கள் வழிபடும் கிறிஸ்தவ ஆலயங்களில் கூடுதல் பாதுகாப்பை ஏற்பாடு செய்யும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் யூதர்களுடன் தொடர்புடைய 5 கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    யூதர்கள் வழிபடும் கிறிஸ்தவ ஆலயம் தமிழகத்தில் சென்னை, கொடைக்கானல் உள்பட 5 இடங்களில் உள்ளது. கொடைக்கானலில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தொடர் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதுபோல தமிழகத்தில் உள்ள முக்கிய கிறிஸ்தவ தலங்களிலும் கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவை தவிர பிரபல கிறிஸ்தவ ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் விடுதிகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் நேற்று பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரெயில்களில் சோதனையை அதிகரிக்க ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் முழுமையாக சோதிக்கப்பட்டன.

    அந்த ரெயில்களில் சென்ற பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்கள் தவிர மிகப்பெரிய வணிக வளாகங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் விமான நிலையத்திலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அனுமதி பெற்ற வெடிபொருள் விற்பனையாளர்கள் பலர் உள்ளனர். பல இடங்களில் அனுமதி இன்றியும் வெடி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த இடங்களில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள வனத்துறையினரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையில் அதிகபட்ச கண்காணிப்பு நடந்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்தார். கோவையில் அதிரடி படையினர் ரோந்து வர உத்தரவிடப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடந்து வருகிறது. சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி விடிய விடிய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சில தகவல்களை தெரிவித்து உள்ளனர்.

    அதன் அடிப்படையிலும் சோதனை நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. கோவையில் மட்டும் 100 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

    உடுமலை:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் கிறிஸ்தவ கூட்டரங்கில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் எதிரொலியாக கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அருகே உள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களில் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனையை பார்வையிட்டார். மேலும் உடுமலை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

    • குண்டுகள் வெடித்து சிதறியதில் மாடன்விளையை சேர்ந்த அர்ஷித், ஹுசைன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி என 3 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவற்கு முன் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் பெருமாத்தூரில் உள்ள மாடன்விளை பகுதியில் இருக்கும் வீடுகளின் மீது நேற்று இரவு 10.30 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.

    அந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் மாடன்விளையை சேர்ந்த அர்ஷித், ஹுசைன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதம் அடைந்தன. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    அவர்கள் யார்? எதற்காக குண்டு வீச்சில் ஈடுபட்டனர்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
    • டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    கூட்டத்தின் 3-ம் நாளான நேற்று முன்தினம் நடந்தது. அதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது மாநாட்டு மைய அரங்கில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனால் பிரார்த்தனை நடந்த மையத்தில் தீப்பிடித்து எரிந்தது.

    பிரார்த்தனையில் பங்கேற்றிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

    அவர்கள் களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53) என்ற பெண்ணும், லிபினா என்ற 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

    குண்டுவெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    அவரிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    மேலும் அந்த சபையின் செயல்பாட்டை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்களது நடவடிக்கையை தொடர்ந்ததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.

    வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை கொச்சியில் பல இடங்களில் வாங்கியதாகவும், பின்பு யூ-டியூப்பை பார்த்து எலெக்ட்ரிக் டெட்டனெட்டர் தயாரிப்பை தெரிந்துகொண்டு வெடிகுண்டுகளை தனது வீட்டின் மாடியில் வைத்து தயாரித்ததாக தெரிவித்திருக்கிறார்.

    மேலும் தயாரித்த வெடிகுண்டுகளை நேற்றுமுன்தினம் காலை பிரார்த்தனை நடந்த இடத்திற்கு கொண்டு சென்று வைத்து, திட்டமிட்டபடி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவித்திருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் டொமினிக் மார்ட்டினை கைது செய்தனர்.

    அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் என்ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

    ஆனால், தான் மட்டுமே இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவர் வெடிபொருட்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து 29 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் அதிக நாட்கள் இருந்திருப்பதால், அவருடனான வெளிநாட்டு தொடர்ப்பு பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் யார் யாருடன் பழகி வந்தார்? வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு யாருடன் தொடர்பில் இருந்தார்? பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 21 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    அந்த 16 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக டொமினிக் மார்ட்டின் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார்.
    • குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் நேற்று முன்தினம் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர். குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் போலீசில் சரண் அடைந்தார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 29 மணி நேரம் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் குண்டு வெடிப்பு சதி திட்டத்திற்கு திட்டமிட்டது, அதன் செயல்படுத்தியது, குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை வாங்கி தயாரித்தது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விசாரணையில் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்த காட்சிகள் உள்ளிட்டவைகளையும் விசாரணையின்போது காண்பித்துள்ளார். விசாரணையின்போது தெரிவித்த தகவல்கள் மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குண்டு வெடிப்பு சதியை நிறைவேற்றியது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவர் கொச்சி பகுதியில் 50 பட்டாசுகள் மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கிறார். மேலும் யூடிப்பை பார்த்து சிம்பிள் சர்க்கியூட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய ரிமோட் தயார் செய்திருக்கிறார்.

    அந்த ரிமோட்டை பயன்படுத்தியே வெடி குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். ரிமோட்டை பயன்படுத்தி குண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோவையும் டொமினிக் மார்ட்டின் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    குண்டுவெடிப்பு நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் கலந்து கொண்டிருக்கிறார். அவர் பங்கேற்கும் தகவல் அறிந்த டொமினிக் மார்ட்டின், அவரை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

    ஆனால் அவர் டொமினிக் மார்ட்டின் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அவரது மாமியார் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். இருந்த போதிலும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்காமல் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பல கடைகளில் பொருட்களை பிரித்து வாங்கி சென்றிருக்கிறார்.
    • குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 16 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த 29-ந்தேதி குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டுவெடிப்பில் இரிங்கோல் பகுதியை சேர்ந்த லியோனா பவுலோஸ்(வயது45), இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த குமாரி(53), லிபினா என்ற 12 வயது சிறுமி ஆகிய 3 பேர் பலியாகினர். கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் குண்டு வெடிப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக கூறி கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டார். மேலும் அவர் கொடகரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும், அந்த சபையின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து வெளியே வந்து விட்டதாகவும், அந்த சபையினர் தங்களின் செயல்பாட்டை நிறுத்தாததால், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் திட்டமிட்டு வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்ததாகவும் அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உபா சட்டம், கொலை, கொலை முயற்சி, வெடிமருந்து தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ., மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை உள்ளிட்டவைகளை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டுகளை தயாரித்தது எப்படி? அதற்கான மூலப்பொருட்களை எங்கே வாங்கினார்?, வெடிகுண்டுகளை திட்டமிட்டு வெடிக்கச் செய்தது எப்படி? உள்ளிட்டவைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவித்தார். மேலும் குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்றியது தொடர்பாக தனது செல்போனில் பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகளையும் காண்பித்தார்.

    அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து டொமினிக் மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்காக டொமினிக் அந்தோணியை அவரது வீடு, குண்டுவெடிப்பு நடந்த மையம், குண்டுகள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய டொமினிக் மார்ட்டின் ரிமோட் கண்ட்ரோலையே பயன்படுத்தி உள்ளார். வெடிகுண்டுகளை தனது வீட்டு மாடியில் வைத்தே யாருக்கும் தெரியாமல் தயாரித்திருக்கிறார்.

    அதற்கான 4 ரிமோட் மற்றும் வயர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் மூலப்பொருட்களை, எர்ணாகுளம் பகுதியில் உள்ள கடைகளில் வாங்கியிருக்கிறார். அப்போது அவர் குழந்தைகளுக்கு பொம்மை தயாரிப்பதற்கு தேவை என்று கூறி எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கியுள்ளார்.

    தனது மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக பல கடைகளில் பொருட்களை பிரித்து வாங்கி சென்றிருக்கிறார். அதேபோன்று பெட்ரோலையும் பல பங்க்களுக்கு சென்று வாங்கியுள்ளார். அதனை வைத்து வெடிகுண்டுகளை தயாரித்து பையில் வைத்து வீட்டிலிருந்து வெளியே எடுத்துச்சென்று குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.

    பின்பு லாட்ஜில் அறை எடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நிறைவேற்றியதாக வெளியிட்ட வீடியோவை அங்கு வைத்து எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதன்பிறகே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டொமினிக் மார்ட்டினின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட சில தடயங்கள் கிடைத்தன.

    விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டினை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 16 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×