search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாஸ்தா கோவில்"

    • பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

    இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.

    தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.

    பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு
    • குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் சிறு சிறு கோவில்கள் என 100 கோவில்களை தமிழக அரசு தேர்வு செய்து 2022-23-ம் ஆண்டில் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. அதன்படி தெங்கம்புதூர் மறுகால்தலை கண்டன் சாஸ்தா கோவிலில் ரூ.20 லட்சத்தில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது, ஊர் மக்கள் கோவிலில் கொடிமரம் வைக்க கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் அரசிடம் பேசி நிறைவேற்றி தருவதாக அறங்காவலர் குழு தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆய்வின்போது தேவசம் பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், ஊர் தலைவர் மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×