search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பரிசுகள்"

    • மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான பகல் நேர பராமரிப்பு மையம் ஆயங்குடிபள்ளம் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

    இம்மையத்தில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் பயின்று வருகின்றனர்.

    தீபாவளி சிறப்பாக கொண்டாடும் நோக்கில் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து சுமார் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகள் 5 மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்த விழாவுக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமைை வகித்தார்.

    கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், வட்டார வளமைைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் அங்கு தான் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தியாகராஜன்,வட்டாரக் கல்வி அலுவலர் கோமதி,சீர்காழி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், ஆசிரியர்கள் சங்க மாநில மாவட்ட ஒன்றியபொறுப்பாளர்கள் கமலநாதன், ராஜேந்திரன், தங்க சேகர், சண்முகசுந்தரம், செல்வம், விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் தொடர்ந்து சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் பேசுகையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தூரில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டித் தரப்படும், இயலாத குழந்தைகளை மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் அதை முழுமையாக பயன்படுத்தும் வகையில் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

    முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் நன்றி கூறினார்.

    • நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.
    • கிராமங்களில் வசிக்கும் 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.

    இந்த ஆதீனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஆதீன கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

    அவ்வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆதீனத்துக்கு உள்பட்ட திருவாவடுதுறை, திருவாலங்காடு, கரைகண்டம், துகிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

    இதனை, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கி தொடக்கி வைத்து அருளாசி கூறினார்.

    இதனை தொடர்ந்து ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட கட்டளை தம்பிரான்கள் கோயில் கண்காணிப்பாளர் சண்முகம், பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஆதீன நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    உடைகளை பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.

    ×