search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கல்
    X

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் உணவுப் பொருட்களை எம்.எல்.ஏ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கல்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
    • பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வளமையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான பகல் நேர பராமரிப்பு மையம் ஆயங்குடிபள்ளம் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.

    இம்மையத்தில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் பயின்று வருகின்றனர்.

    தீபாவளி சிறப்பாக கொண்டாடும் நோக்கில் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து சுமார் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தாடைகள் இனிப்புகள் 5 மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்த விழாவுக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமைை வகித்தார்.

    கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர், வட்டார வளமைைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் அங்கு தான் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தியாகராஜன்,வட்டாரக் கல்வி அலுவலர் கோமதி,சீர்காழி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், ஆசிரியர்கள் சங்க மாநில மாவட்ட ஒன்றியபொறுப்பாளர்கள் கமலநாதன், ராஜேந்திரன், தங்க சேகர், சண்முகசுந்தரம், செல்வம், விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் தொடர்ந்து சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் பேசுகையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தூரில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டித் தரப்படும், இயலாத குழந்தைகளை மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் வைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.

    தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் அதை முழுமையாக பயன்படுத்தும் வகையில் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.

    முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×