என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறதி நோய்"

    • நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும்.
    • சுமார் 3½ கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    'அல்சைமர் நோய்' என்பது படிப்படியாக வளரும் நரம்பியல் சம்பந்தப்பட்ட ஒரு தீவிரநோய் ஆகும். இதை 'மறதிநோய்' என்றே நேரடியாக சொல்லலாம். இது மூளையிலுள்ள நரம்பு செல்கள் சேதமடைவதால் ஏற்படுவதாகும்.

    நேற்று நடந்தது இன்று ஞாபகமில்லை. இன்று நடப்பது நாளை ஞாபகத்தில் இருக்காது என்ற நிலை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால், அவனது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு எப்படி இருக்கும்? வாழவே பிடிக்காது.


    இந்த 'குறுகிய கால நினைவு இழப்பு நோய்' நினைவை இழக்கச் செய்யும், சிந்தனையை மறக்கச் செய்யும். வயது கூடக்கூட இந்த நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. உலகமெங்கும் சுமார் 3½ கோடி மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

    மறதி என்பது குறைவான அளவில் எல்லோருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சினைதான். ஆனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பொருளை இங்கேதானே வைத்திருந்தேன் காணவில்லையே, நேற்று நான் அப்படி சொல்லவே இல்லையே, அந்த பேப்பரில் நான் கையெழுத்து போடவே இல்லையே, இப்படி தினமுமே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார், சொல்வார், செய்வார். இம்மாதிரி நபர்களுக்கு மதிப்பீடு என்றொரு சோதனையையும், அறியும் திறன் என்றொரு சோதனையையும் செய்து பார்த்தால் தெரிந்துவிடும்.

    தூக்கம் வருவதில் சிக்கல், பேசுவதில் சிக்கல், ஒரே பேச்சை திரும்பத் திரும்ப சொல்லுவது, தன் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர்களையே மறந்துவிடுவது, தவறான நடத்தைகளில் ஈடுபடுவது, சித்தப்பிரமை என்று சொல்வார்களே அப்படி செயல்படுவது இன்னும் நிறைய வித்தியாசமான செயல்களை இவர்கள் தினமும் செய்வார்கள்.


    இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் நல்ல ஆரோக்கியமான எல்லா சத்துக்களும் நிறைந்திருக்கக்கூடிய சரிவிகித சத்துணவாக தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். ஆரோக்கியமான, சத்தான உடலுக்கு தீங்கு விளைவிக்காத சமையல் எண்ணெய் வகைளை உபயோகிக்க வேண்டும். கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    தினமும் கண்டிப்பாக சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி முதலிய ஏதாவதொன்றை தினமும் செய்ய வேண்டும். சிகரெட், மது உபயோகிப்பவர்களாக இருந்தால், அறவே தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.

    நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி, தன்னை சுற்றி இருப்பவர்களுடன் நன்கு பேசிப் பழகுதல், மூளைக்கு வேலை இவைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்சைமர் நோயின் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வெளியே வரலாம்.

    சோம்பேறித்தனமாக எந்நேரமும் படுத்தே இருக்காமல் உடலுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் தகுந்த சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பித்து நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

    பழைய விஷயங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையே என்று நினைத்து சலிப்படைந்து அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. இரவு நாம் படுக்கப் போவதற்குள் எப்படியும் அதை யோசித்து திரும்பத் திரும்பக் கொண்டுவந்து பழைய விஷயத்தை கண்டுபிடித்து விடவேண்டும்.

    மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். 100 வயதிலும் நல்ல நினைவாற்றலுடன் வாழலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே இந்நோயின் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது உங்கள் கையிலும், உங்கள் குடும்பத்தினர் கையிலும்தான் உள்ளது.

    • நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை.
    • 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.

    திருப்பதி:

    ஐதராபாத் எம்.பி ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

    ஒவைசி பா.ஜ.க.வின் பி டீம் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் நிறுத்தப்படுவார் இதன் மூலம் பா.ஜ.க எளிதில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்து ஒவைசி, கூறுகையில் :-

    ராகுலுக்கு அம்னீசியா என்ற அரசியல் மறதி நோய் உள்ளது. அவர் எளிதில் மறந்து விடுவார். நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் ரெட்டி வெற்றி பெற்றார்.

    இதில் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததா? 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.

    ஆனால் அமேதியில் போட்டியிடவில்லை. அமேதியில் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அங்கு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் பணம் வாங்கினாரா? குஜராத்தில் பா.ஜ.க ஏன் வெற்றி பெறுகிறது. எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.

    • பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
    • 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கின்றனர்.

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் உள்ள பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

    அமராவதி பிரசாரத்தில் பேசிய ராகுல், அதானியின் தாராவி திட்டத்திற்காக கடந்த 2022 இல் மகாராஷ்டிர அரசையே பாஜக கவிழ்த்தது. மோடியும் அமித் ஷாவும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கிறனர்.

     

    இதனாலேயே மகாராஷ்டிர அரசு மக்களாகிய உங்களின் கைகளில் இருந்து பாஜகவால் பறிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிர அரசை திருடிய பாஜக அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக கூறிவது எப்படி.

    எனது சகோதரி [பிரியங்கா காந்தி] சமீபத்தில் தான் மோடி பேசியதை கேட்டது பற்றி கூறிக்கொண்டிருந்தார். தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார். எனக்கு தெரியவில்லை, ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கலாம்.

    அமெரிக்க முன்னாள் அதிபருக்கு தனக்கு பின்னல் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டுமாம், உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் [ஜோ பைடன்] அறிமுகப்படுத்தினார். அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதே போல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று ராகுல் விமர்சித்தார்.

    • உடலிலும், மனதிலும் மந்த தன்மையை உருவாக்குகிறது.
    • மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும்.

    உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இறப்புக்கு மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளது. புள்ளி விவரப்படி அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மதுபானங்கள் ஏற்படுத்தும் நோய்களால் இறக்கின்றனர்.

    மேலும் 1½ கோடி பேர் ஆல்கஹால் பாதிப்புகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.


    பொதுவாக, மதுபானங்களுக்கு அடிமையாவது மனித ஆற்றலை அழிக்கிறது. சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மது காரணமாக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு.

    குடிப்பழக்கம் குடும்பங்களில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சிகரமான குடும்ப சூழலை அழிக்கிறது.

    தனி மனிதர்களை பொறுத்தவரை தொடர்ச்சியாக மது அருந்தும் ஒருவருக்கு மன குழப்பம், சோர்வு, எதிலும் நாட்டமின்மை, மன அழுத்தம் ஆகியவை நிரந்தரமாக உருவாகி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தொடர்ந்து மது குடிப்பதால் மூளையின் ஆற்றல் சிதைந்து சிந்திக்கும் திறன் மற்றும் முடிவுகள் எடுக்கும் திறன் குறைந்து போவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    ஆல்கஹால் பொதுவாக மூளை மற்றும் உடலை பலவீனமாக்கி உடலிலும், மனதிலும் மந்த தன்மையை உருவாக்குகிறது. இதற்கு காரணம், ஆல்கஹால் மூளை செல்கள் புதிதாக உருவாவதை தடுப்பது தான்.


    மதுபானங்களை தொடர்ந்து அருந்தும் ஒருவருக்கு மறதி ஏற்படும். சமீபத்திய சம்பவங்களை கூட மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். நன்கு தெரிந்தவர்கள் பெயர் கூட மறந்து போவதும், தேவையில்லாத பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்து குழப்பமான மனநிலையை உருவாக்கும்.

    மதுபானத்தால் மற்ற உறுப்புகளை விட மூளை மிக கடுமையாக பாதிக்கப்படும் போது அது மூளை தேய்மான பாதிப்பாக உருவெடுக்கிறது. இது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை உருவாக்கி வேலை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    ×