என் மலர்
நீங்கள் தேடியது "திருமண நிச்சயதார்த்தம்"
- ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடம் பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐபிஎல் மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இவர் ஐபிஎல் தொடரில் 36 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 956 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதன் பிறகு 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 2 ஒருநாள் போட்டியில் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து சரியாக விளையாட காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் 28 வயதான வெங்கடேஷ் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவருக்கும் ஸ்ருதி ரங்கநாதனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- செலீனா கோம்ஸ்-ஐ இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
- தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று செலீனா கோம்ஸ் தெரிவித்திருந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதனையொட்டி இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு நிச்சயம் செய்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செலினா கோம்ஸ் வெளியிட்டுள்ளார்.
32 வயதான செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதுவரை அவரை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
"தனக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தற்போது வாடகைத் தாய் மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்றவை இருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று செலினா கோம்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விலை உயர்ந்த கார்களில் மண்டபத்திற்கு செல்லும் புதுமண ஜோடிகள் மத்தியில் சைக்கிளில் வித்தியாசமாக சென்றது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
- பல்லக்கில் அமரவைத்து மண்டபத்தின் உள்ளே திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடிய படியே தூக்கி சென்றதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
காஞ்சிபுரம்:
திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தற்போது சினிமா திரைப்பட காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெறுகிறது. இந்த வீடியோ காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனால் அதிக செலவுகள் செய்து பிரமாண்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவில் மணப்பெண்ணை சைக்கிளில் முன்னால் அமர வைத்து புதுமாப்பிள்ளை ஊர்வலக அழைத்து வந்த ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும், யோகலட்சுமிக்கும் திருமண நிச்சயதார்த்த விழா காஞ்சிபுரம் அடுத்து ஓரிக்கையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக மண்டபத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலில் இருந்து மணப்பெண் யோகலட்சுமியை சைக்கிளின் முன்னால் அமர வைத்து புதுமாப்பிள்ளை மனோஜ் ஊர்வலமாக ஓட்டி வந்தார். அவர்களை பின்தொடர்ந்து உறவினர்கள் உற்சாக குரல் எழுப்பினர். விலை உயர்ந்த கார்களில் மண்டபத்திற்கு செல்லும் புதுமண ஜோடிகள் மத்தியில் சைக்கிளில் வித்தியாசமாக சென்றது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
இதற்கிடையே திருமண மண்டபவாசலுக்கு வந்ததும் யோகலட்சுமியை அவரது சகோதரர்கள் 4 பேரும் பல்லக்கில் அமரவைத்து மண்டபத்தின் உள்ளே திரைப்பட பாடலுக்கு ஏற்ப நடனமாடிய படியே தூக்கி சென்றதும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் நடைபெறுகிறது.