என் மலர்
நீங்கள் தேடியது "மேட்டூர் அணை"
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
- தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.22 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1073 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1235 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
அதே நேரம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் மெதுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 425 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 108.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 21 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து விநாடிக்கு 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன.
உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 12-ந்தேதியில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முதல் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
- டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று அணையில் இருந்து விநாடிக்கு 22 ஆயிரத்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 18,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
- டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 18,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
- இன்று காலை 8 ஆயிரம் கன அடி சரிந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
இன்று காலை 8 ஆயிரம் கன அடி சரிந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
- மழையின் காரணமாக இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி முதல் தொடங்கியதை அடுத்து ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.
நேற்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மழையின் காரணமாக இன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் 14,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
- நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுப்பகுதி மற்றும் அருவி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசலில் அமர்ந்து உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள். படகுத் துறை மற்றும் மணல் திட்டு, ஐந்தருவி, கொட்டும் அருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.
நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் பாதுகாப்பான இடங்களில் ஆற்றில் இறங்கி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.
இதனால் நேற்று விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கன அடி தண்ணீரும் என மொத்தம் விநாடிக்கு 20,750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன.
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றுப்பகுதி மற்றும் அருவி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.
இதனால் நேற்று காலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. பின்னர் மாலை நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலையும் அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.
அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி வீதமும், நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி வீதமும் கால்வாயில் 750 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- தொடர்ந்து இன்று 4-வது நாளாக அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
- அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் விநாடிக்கு 26 ஆயிரத்து 750 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.
இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் கடந்த 1-ந்தேதி மாலையில் நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
தொடர்ந்து இன்று 4-வது நாளாக அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் விநாடிக்கு 26 ஆயிரத்து 750 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணை உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி வீதமும், அணையையொட்டியுள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி வீதமும் கால்வாயில் 750 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுவதால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் மீண்டும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 5-வது நாளான இன்று காலை நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.
- மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நேற்று காலையும் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக நீடித்தது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 5-வது நாளான இன்று காலை நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. பின்னர் தண்ணீர் வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
அணை நிரம்பிய நிலையில், உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 25-வது நாளாக, அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
- ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- தொடர்ந்து 26-வது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 18 ஆயரம் கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 26-வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது.