search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் கருணாநிதி"

    • தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
    • தி.மு.க. பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர் 17-ந்தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாளாகும். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு, தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.

    திமுக முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு நார்காலியில் AI மூலம் கலைஞர் அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ ஏற்பாட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
    • கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பேரணியை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

    அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எல்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • கருணாநிதியின் நினைவு நாளில் சிலை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னையில் இருந்தபடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவருடன் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.

    திருச்சியில் காணொளி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோ இருதய ராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர்.

    கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளில் இந்த சிலை திறக்கப்பட்டதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் கழக நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.
    • நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.

    சென்னை:

    திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.

    மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.

    கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.

    கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

    ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல்; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைககளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம்.

    கலைஞர் புகழ் பரவட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடிய புகாரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
    • முடிந்தால் என்னை கைது செய்யுங்க பார்க்கலாம்'' என்று தமிழக அரசுக்கு சீமான் சவால் விட்டார்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் ரிலீசாகி உள்ளார்.

    சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கருணாநிதி பற்றிய அவதூறான பாடலை சீமானும் பத்திரிகையாளர் சந்திப்பில் பாடியதோடு, ‛‛முடிந்தால் என்னை கைது செய்யுங்க பார்க்கலாம்'' என்று தமிழக அரசுக்கு சவால் விட்டார்.

    இந்நிலையில் கலைஞர் பற்றி அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை, சாதாரண மனிதர்களின் தொனி அல்ல. அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சீமான், சட்டை துரைமுருகன் பெயரை குறிப்பிடாமல் அவர்களை விமர்சித்து கண்டன அறிக்கை ஒன்றை கிருஷணசாமி வெளியிட்டுள்ளார்.

    அதில், "கலைஞர் கருணாநிதியை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவே புனயைப்பட்டதாக கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது அநாகரிக்கத்தின் உச்சக்கட்டம்; முழுக்க முழுக்க அடாவடி சாதிய மனப்பான்மையோடு எழுப்பப்பட்ட முழக்கம் அது.

    இதுபோன்று பயன்படுத்தப்படும் சொல்லாடர்களுக்கு பல்வேறு விதமான மோசமான எதிர் கருத்துகளும், விமர்சனங்களும் தொடர் சங்கிலியாக மாறும். மொழியை பயன்படுத்தி கொண்டு இளைஞர்கள் மத்தியில் சாதிய ஆணவ மேலதிக்க உணர்வுகளுக்கு தூபமிடுவதும், அதை வளர்த்தெடுப்பதுமே கொள்கை - கோட்பாடு, பண்பாடாக கொண்ட இளைஞர் சமுதாயம் ஒன்று உருவாவது தமிழ் சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.

    கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் மேடை நாகரிகங்கள் அறவே இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்; சமூகத்தை சீரழித்து வரும் சமூக வலைதளங்கள் எனும் நவீன தளங்களை பயன்படுத்தி , நாகரிகம் அடைய வேண்டிய ஒரு சமுதாயத்தை பின்னோக்கி தள்ளும் சிலரின் தீய எண்ணங்களும் மேலும் தளைத்திட அனுமதிக்க கூடாது. தற்போது நடைபெறுவது சட்டசபை இடைத்தேர்தல்; இன்று முதல்வராக இருக்க கூடியவர் முக ஸ்டாலின். கருணாநிதி காலமாகி ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்கும்,இடைத்தேர்தலுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. தனது 44வது வயதில் 1969ம் ஆண்டில் தமிழகத்தில் முதலமைச்சாராக முதல் முறையாக பதியற்றவர்.அதற்கு பிறகு ஐந்து முறை முதலமைச்சர் பதவியிலிருந்திருக்கிறார்.

    அவருடைய கொள்கைகள் அல்லது செயல்பாடுகளோடு நூற்றுக்கு நூறு எல்லோருக்கும் உடன்பாடு இருந்திருக்காது. தேர்தல் காலங்களில் கூட்டணிக்காக பல கட்சிகள் அவரிடம் நெருங்குவார்கள்; பின் விலகுவார்கள். இது அவருக்கு மட்டுமே உரித்தானது அல்ல. 1967ல் அண்ணா தலைமையில் ஏழு கட்சி கூட்டணி உருவாகி, தேர்தல் முடிந்த பின் கூட்டணியில் அங்கம் பெற்ற பல கட்சிகள் எதிர்நிலை எடுத்தன. 1967இல் யாரை வீழ்த்தினார்களோ, நான்காண்டு கழித்து 1971இல் அவர்களுடனே கூட்டணி சேரும் நிலை உருவாகிற்று. தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இதேபோன்ற அசரியல் நிலைப்பாடு தான் நிலவுகிறது.

    கொள்கை, கோட்பாடு, செயல்பாடுகளில் அவரோடு முரண்பட்டு கொண்டே பயணித்தவர்களும் உண்டு; எதிர்த்து வெளியேறியவர்களும் உண்டு. அவருடைய எல்லா கருத்துகளிலும், எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் உடன்படவும் முடியாது; முரண்படவும் முடியாது. அவருடன் ஒத்துப்போகக்கூடிய கொள்கை, கோட்பாடுகளும் உண்டு; சிறிதும் ஒத்துப்போக முடியாத பல்வேறு அசம்ங்களும் உண்டு. ஜனநாயகத்தில் இதுவே எதார்த்தமாக இருக்கிறது.

    அவர் பல அபார தனித்திறமைகள் கொண்ட அபூர்வ அரசியல்வாதி, கண்மூடி கண் திறப்பதற்குள் பலரையும் ஒன்றும் சேர்ப்பார்; பிரிக்கவும் செய்வார். இது அவரிடம் இருந்த பலரை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் தனித்திறமை ஆகும். அவரோடு பழகுகின்ற காலத்தில் ஒரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப்போவார்; இன்னொரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு எதிர்நிலை எடுப்பார். இந்த திறமைகளால் தான், அற்ப சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஒரு சமுதாயத்தில் அதுவும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் தமிழகத்தில் அவரால் அரசியல் செய்ய முடிந்தது; ஆட்சியில் இருக்க முடிந்தது.

    நமக்கு மாணவ பருவத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு தருணங்கள் உண்டு. அவரோடு பயணித்த காலங்கள் இனிமையானவதாகவும் இருந்திருக்கிறது; மிக மிக கசப்பானதாகவும் இருந்திருக்கிறது. சமூக, அரசியல் சூழலை கணக்கில் கொண்டு நெருங்கியும் இருந்திருப்போம்; வெகுதூரம் விலகியும் சென்றிருப்போம். சட்டசபைக்கு உள்ளேயே ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து மோதல்கள் கூட நடைபெற்றது உண்டு. ஜனநாயகத்தில் பொதுவாழ்வில் இந்த இரண்டுமே சம கூறானவை. இரண்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிக்குமே்பாது அல்லது ஒன்றின் தலைமையில் இன்னொன்று செயல்படுகின்ற பொழுது ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும் பிரிய நேரிடுகின்ற பொழுது கருத்தியல் ரீதியாக தாக்கி கொள்வதும் உலக அளவிலும் உண்டு; இந்தியாவில் அதிக அளவிலும் உண்டு. அதிலும் தமிழகத்தில் மிக மிக அதிக அளவில் உண்டு.

    கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பிட்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் அரசியல் மேடைகளை அரைமணிநேரம் கூட நின்று பார்க்க முடியாது. கேளிக்கைபடுத்துவது என்ற பெயரில் ஆபாசமும் அருவருப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கும். இடைப்பட்ட காலத்தில் அவைகளுக்கு விடை கொடுக்கப்பட்டன. 1996க்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டு காலம் ஓரளவிற்கு மேடைப்பேச்சுக்கள், விமர்சனங்கள் நாகரீகமாகவே அமைந்தன. அண்மைக்காலமாக இன்றைய ஆளுங்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் மேடைகள் பொது இலக்கணங்களிலிருந்து விலகி, தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்கான முன்னுதாரணங்களை அரங்கேற்றி வருகின்றன. பல நேரங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வழக்கறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட சாதி ரீதியான சமூகங்களை குறிப்பிட்டு ஒப்பிடக்கூடிய போக்குகள் அதிகரித்து வந்துள்ளன. மூன்றாம் தர, நான்காம் தர பேச்சாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் வரம்பு மீறி பேசிய உதாரணங்களும் உண்டு. ஆனால் அவையெல்லாம் அவ்வப்போது உயர் பொறுப்பில் இருக்கூடியவர்களால் கண்டிக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் என்றே ஒருநாள் ஒரு நாகரிகமாக சூழ்நிலைகள் உருவாகி இருக்கும்.

    அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல பேருடைய பேச்சுக்கள் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க கூடியதாகவும், ஆத்திரமூட்டக்கூடியதாகவும் பெரும் கலவரங்களையே உருவாக்க கூடியதாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக யூடியூப், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற தொழில்நுட்பங்கள் மிக மிக மோசமானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டன. பல்வேறு முகவரிகளிலும் தங்களது முகங்களை வெளிப்படுத்தாமல் அநாகரிகமாக கருத்துகளை உமிழும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.

    இன்னும் பலபேர் ரூபாய் 200க்கும், 300க்கும் கூலிக்காக கூட சில அமைப்புகள் அரசியல் கட்சிகளின் ஏவல்களாக செயல்படுகின்றனர். சமூக வலைளங்கள் இப்பொழுது இருபக்கமும் கூர்மையடைந்த ஆயுதம் போல் ஆகிவிட்டது. தங்களுடைய முகங்களையும், முகவரிகளையும் மறைத்து கொண்டு சாதிய, மத ரீதியான வன்மத்தோடு கருத்துகளை பதிவிடுதவதை ‛கருத்துரிமை' என்ற பெயரில் காலச்சாரமாக்க முற்படுகிறார்கள்; அவர்களே ஒரு இயக்கமாகவும் திரளுகிறார்கள். அவர்களுக்கோ இந்த மண்ணுக்கோ மொழிக்கோ எவ்வித உண்மையான பந்தமும் பற்றும் கிடையாது. இதுபோன்ற தான் தோற்றித்தனமாக ‛கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் தமிழ் கலச்சாரத்தை கெடுக்க கூடியவர்களுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது.

    கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் நல்லதும் நடக்கிருக்கிறது; மேசமான சம்பவங்களும் நடந்து இருக்கிறது;. அவருடைய பங்களிப்பு தமிழுக்கோ, தமிழ் சமுதாயத்திற்கோ எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆட்சியாளராக இருந்தபோது அவருடய அரசியல் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. அதேபோன்று அவருடயை ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு சாதகமாக நடவடிக்கைகளையும் குறிப்பிட்டால் மட்டுமே அவருடன் ஆட்சிக்கால குறைபாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உண்டான அருகதையும் தகுதியும் பெற முடியும்.

    தேர்தலாக இருந்தாலும், அரசியல் பிரச்சனைகளாக இருந்தாலும், மக்களுடயை பிரச்சனைகளாக இருந்தாலும் எண்ணிய சில மணி நேரங்களிலேயே அல்லது ஓரிரு நாட்களிலேயே அதுகுறித்து அவரிடம் சென்று பேசுவதற்கு உண்டான ஆளுமை அவரிடத்திலேயே இருந்தது. அதுதான் ஜாதி வெறியும், மதவெறியும் இனவெறியும் ஒவ்வொருவரது அணுவிலேயும் ஊறிப்போய் இருக்ககூடிய தமிழகத்தில் ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் இருந்திருக்கிறார்; 60 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்திருந்திருக்கிறார்.

    அவருடய தவறான அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்தற்கு எத்தனையோ தளங்கள் உண்டு. எத்தனையோ காரணிகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மறைந்த ஆறேழு வருடங்களுக்கு பிறகும், எப்பொழுதோ யாராலோ எதற்காகவே புனையப்பட்ட அவதூறு பாடலை சம்பந்தமில்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரை கொச்சைப்படுத்தி வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பாடி காண்பிப்பதும், அதற்காக ஒருவர் மீது சட்ட நவடிக்கைகள் பாயும் பொழுது, அதை நாகரீகமாக சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதற்கு பதிலாக, ‛‛அதே வர்த்தையை திரும்ப சொல்லி முடிந்தா நடவடிக்கை எடுத்து பார்'' என்று சொல்வதெல்லாம் அரசியலாக தெரியவில்லை. சாதிய ஆவணத்தின் இன்னொரு வடிவாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

    ஒருவர் மறைந்து விட்டால் அவரை விமர்சனம் செய்யககூடாதே என்ற கேள்வியோ, அதற்காக அனுதாபமோ காட்ட வேண்டும் என்பதில்லை. அதேசமயம் பாடிக் காட்டியவர்களின் மனோ நிலை; அந்த பாடல் வரிகளின் பொருள்; பாடியவர்களின் தொனி; அதை ஆதரித்தவர்களின் தொனி என அனைத்தும் சாதாரண மனிதர்களின் தொனியாக தெரியவில்லை; அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. கண்டிக்க மனமுடையோர் கண்டிக்கலாம்; கடந்த செல்லக்கூடியவர்கள் கடந்து செல்லலாம்; ஆனால் நியாயப்படுத்த மட்டும் முயல்வது , நியாயமாகாது. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'' என தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்.
    • பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

    டெல்லியில் கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்தநாள் ஒட்டி இந்தியா கூட்டணி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோர் கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "கலைஞர் கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம்

    தேசக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய கலைஞர் கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்

    பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர்

    நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஹாக்கி விளையாட்டு கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும்.
    • தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கும் 3-வது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.

    பெற்றோரும், தமக்கையரும் சீராட்டி சீர்மிகு அன்பில் பாராட்டி வளர்த்ததில் போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார். சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வை கண்டு இனி இசை வகுப்புக்கு செல்வதில்லை என்று தீர்மானமாக தன் தந்தையாரிடம் தெரிவித்தார். 

    திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக கலைஞர் சேர்ந்ததே வியப்பான நிகழ்வு. வயதின் காரணமாக அனுமதி மறுக்கப்பட, பள்ளியில் இடமளிக்கவில்லை என்றால் எதிரே இருக்கும் குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் போராடி பள்ளியில் சேர்ந்தார். அந்தப் போராட்ட குணமே கலைஞரின் அடையாளமாக இறுதிவரை நிலைத்தது. 1939-ம் ஆண்டு, கலைஞர் 8-ம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.

    விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.

    15-வது வயதில் கலைஞர் மு. கருணாநிதி தனது சொந்த பதிப்பகப் பயணத்தை தொடங்கினார், மாணவநேசன் என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

    இது தோராயமாக "மாணவர்களின் நண்பர்கள்"என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 75 ரூபாய் நிதியில், 1941-ல் தமிழ்நாடு தமிழ் மாணவர் சங்கத்தை நிறுவினார். ஒரு வருடம் கழித்து, சங்கம் அதன் ஆண்டு விழாவை நடத்தியது. இதில் பாரதிதாசன், கே.ஏ.அன்பழகன், கே.ஏ.மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூரில் மு.கருணாநிதி எழுத்துக்கள் பிரபலமடைவதால் தனது பதிப்பகத்தை விரிவுபடுத்துவதற்காக முரசொலியை தொடங்கினார். அண்ணா துரை கருணாநிதியை நேரில் சந்தித்தபோது, அவர் வெறும் 18 வயது பள்ளி மாணவர் என்பதை கண்டு வியப்படைந்தார்.

     

    மு.கருணாநிதி தமிழ் அரசியலில் எழுச்சி பெற உதவிய முக்கிய தருணங்களில் ஒன்று, 1953 -ம் ஆண்டு தனது 29-வது வயதில் கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தான். அங்கு சிமென்ட் தொழிற்சாலை வைத்திருந்த இடத்திற்கு "டால்மியாபுரம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    டால்மியாபுரம் என்ற பெயர் வட இந்திய ஆதிக்கத்தையும், சுரண்டல் வணிக நடைமுறைகளையும் குறிக்கிறது என்று கருதிய கருணாநிதியும் அவரது தோழர்களும் ஊரின் பெயரை மீண்டும் கல்லக்குடி என மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    போராட்டத்தின்போது மு.கருணாநிதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரெயில் நிலையத்தில் டால்மியாபுரம் என்ற பெயரை துடைத்தெறிந்ததோடு, ரெயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக, 6 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

    1965 -ம் ஆண்டில், மத்திய அரசு இந்தியை ஒரே அலுவல் மொழியாக அறிவித்தது. இது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டியது. சி.என்.அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. இந்த முடிவுக்கு எதிராக தொடர் பேரணிகளை நடத்தியது. "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்ற முழக்கங்கள் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. வன்முறை வெடித்தது மற்றும் சிலர் தீக்குளித்தனர்.

    தி.மு.க-வின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியப் பிரமுகரான மு. கருணாநிதி 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரை என்றென்றும் சொல்லும் வகையில் முத்தான திட்டங்களை தந்த கலைஞர் புகழ் கிராமங்கள் வரை நிலைத்து நிற்கிறது.

    இந்தியாவின் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. தி.மு.க.வின் சார்பில் கலைஞர் திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் நின்றார். வென்றார். தனது 33-ம் வயதில் சட்டசபைக்குள் நுழைந்தார். இதற்குப் பின் 2016 ஆண்டு வரை 13 முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றில் கூட தோற்காமல் வெற்றி வாகை சூடினார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் சாதனையாளர் கலைஞர்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது பல திட்டங்கள் செயல்படுத்தினார்.

     

    கலைஞர் என்று அன்புடன் நினைவு கூறப்படும் முத்துவேல் கருணாநிதி தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அவர் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரை மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அரும்பாடுபட்டார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை குறைப்பதற்கும் அனைவருக்கும் சம வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அவர் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். தமிழில் பல இலக்கியப் படைப்புகளை எழுதினார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதில் உள்ள முக்கிய திட்டங்கள்:

    2-வது காவல் ஆணையம்

    அதிகரித்து வரும் குற்றச்செயல் விகிதங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், காவல்துறையை நவீனப்படுத்தவும் 1989-ம் ஆண்டு 2-வது காவல் ஆணையத்தை கலைஞர் அறிமுகப்படுத்தினார்.

    ஊதியக் குழு, உயர்ந்த சம்பளம்

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை மத்திய அரசு தரத்துடன் கலைஞர் சீரமைத்தார். அவர் ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழக்கமான சம்பளத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். பொங்கல் பண்டிக்கைக்கான முன்பணம், பண்டிகை மற்றும் பயணப்படிகள், மருத்துவச் செலவுகளைத் திரும்ப வழங்குதல் போன்றவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

    நெல் கரும்பு உற்பத்தி அதிகரிப்பு

    கலைஞரின் பல்வேறு விவசாய நடவடிக்கைகளே நெல் உற்பத்தியை 3.5 மில்லியன் டன்னிலிருந்து 5.6 மில்லியன் டன்னாகவும், கரும்பு உற்பத்தியை 9.5 மில்லியன் டன்னிலிருந்து 29.7 மில்லியன் டன்னாகவும் உயர்த்தியது. மேலும் மலிவு விலை அரசி திட்டம், உணவு பற்றாக்குறையைச் சமாளித்து அரிசி உற்பத்தியில் பஞ்சாபை மிஞ்சியது.

    உழவர் சந்தை

    விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் உழவர் சந்தைகளைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார். இடைத்தரகர்கள் இல்லாமல் மலிவு விலையில் காய்கறிகளை வழங்க மதுரையில் நவம்பர் 14, 1999-ல் முதல் சந்தை திறக்கப்பட்டது. இந்த முயற்சி பிரபலமடைந்து, நவம்பர் 14, 2000-ல் 100-வது சந்தை சென்னை பல்லாவரத்தில் திறக்கப்பட்டது.

    பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டம்

    ஈ.வெ.ரா - நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்புத் திட்டம் தமிழ்நாட்டில் பெண்கள் கல்விக்குப் பெரிய உதவியாக இருந்தது. உயர்கல்வி கிடைப்பதற்கு வழிவகை செய்தார் கலைஞர். இந்த மாற்று முன்முயற்சியானது, பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தேசிய அளவில் ஏற்கப்பட்டது.

    இளைஞர் நல வாரியம்

    கலைஞர், தமிழ்நாடு இளைஞர் நல வாரியத்தை நிறுவினார். விளையாட்டுக் கழகங்கள் அமைக்கப்பட்டு, இளம் வீரர்களின் திறமைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. மாநில இளைஞர் விழா நடத்தி விளையாட்டுப்போட்டிகள், கலை மற்றும் கலாசாரத்தில் திறமைகளை ஊக்குவித்தது. "பள்ளியில் கபடி" போன்ற திட்டங்கள் மூலம் மாநிலத்தில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தியது.

    மீன்பிடிப்பு அதிகரிப்பு

    1966-ம் ஆண்டில், மொத்த மீன் பிடிப்பு 1,26,286 டன்களாக மட்டுமே இருந்தது. ஆனால் மீனவர்களுக்குக் கலைஞர் அளித்த தொடர் ஆதரவால் 2010-ம் ஆண்டில் கடல் மீன் பிடிப்பு 3,96,827 டன்களாக அதிகரித்தது.

    தமிழ்த்தாய் வாழ்த்து

    மனோன்மணியம் பெ.சுந்தரனார் எழுதிய நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப் பாடலை அரசு மற்றும் கல்வி நிகழ்வுகளில் பயன்படுத்த ஆணை பிறப்பித்தார் கலைஞர். தமிழ்மொழியின் மேன்மையை போற்றும் வகையில் இன்றளவும் இந்தப் பாடல் தமிழ்நாட்டில் விழாக்களில் பாடப்படுகிறது.

    பெரியார் சமத்துவபுரம்

    1997-ல் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கினார். இது பெரியாரின் சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை மதிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெரியாரின் கொள்கைகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டில் சமூக நீதியை முன்னெடுத்தது.

    கை ரிக்சா ஒழிப்பு

    மனிதனை மனிதன் வாகனத்தில் உட்கார வைத்து இழுத்துச் செல்லும் கை ரிக்சாக்களை கலைஞர் ஒழித்து, அதற்கு மாற்றாகச் சைக்கிள் ரிக்சாக்களை அறிமுகப்படுத்தினார்.

    குடிசைகள் இல்லாத தமிழகம்

    குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பது கலைஞரின் லட்சியம். இந்தியாவிலேயே முதன் முறையாகக் கலைஞரின் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் குடிநீர், வடிகால் அமைப்புகள், மின்வசதி போன்ற உள்கட்டமைப்புடன் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கி தரப்பட்டன.

    நில உச்சவரம்பு

    நில சீர்திருத்தச் சட்டத்தை முன்மொழிந்து நில உச்சவரம்பு ஒரு நபருக்கு 30 ஏக்கர் என்றிருந்ததை 15 ஏக்கர் என குறைத்தார் கலைஞர். இது நில உரிமை வேறுபாடுகளை குறைத்தது. பலரை நில உரிமையாளராகவும் மாற்றியது.

    • தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
    • கருணாநிதியின் ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில்,

    டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

    அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.


    தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இங்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையான விஷயம்," என்று தெரிவித்தார்.

    • நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார்.
    • முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில்,

    நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.

    வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!

    வெல்க தமிழ்நாடு!

    வெல்க இந்தியா! என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,

    பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.

    எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, 'ஓய்வெடுக்காமல் உழைத்த' கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார்.

    இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

    கலைஞர் வாழ்க... அவர் புகழ் ஓங்குக! என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில்,

    • "தமிழர்களே தமிழர்களே நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால் தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன்
    • ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்...

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக தி.மு.க. எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 

    அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் பேசிய,

    "தமிழர்களே தமிழர்களே

    நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால்

    தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன் அறிஞர் அண்ணா அவர்களால்

    நான் வலுப்பெற்றவன் என்னுடைய கழக கண்மணிகளால்.."

    "ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்... அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா... சுண்ணாம்பா..."

    "இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல... உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்...," உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் கோர்வையாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

     மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

    இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பார்வையிட்டனர்.

    ×