என் மலர்
நீங்கள் தேடியது "ஜம்மு காஷ்மீர்"
- கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் என்கவுண்டர் நடைபெற்றது.
- இதில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சியை எல்லை பாதுகாப்புப் படைவீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் 5 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.
அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கதுவா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படைவீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை.
- ஐந்து பயங்கரவாதிகளில் இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட முயற்சி மேற்கொள்கின்றனர்.
இதை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஐந்து பயங்கரவாதிகள் கதுவா மாவட்டத்தில் உள்ள தொலைதூர காட்டுப் பகுதியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஐந்து வீரர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த வீரர்களுக்கு கதுவா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பு செயல்பாட்டுக்குழு மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த நடவடிக்கையில் இறங்கியது.
- ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
- பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாகிவிட்டு என மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இதைபோன்று அனைத்து அமைப்புகள் (குழுக்கள்) முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட பாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
- பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-
யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
- பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்
இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.
இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.
- வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
- ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிப் பெற மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக தகவல்.
குல்காம்:
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து காஷ்மீர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல். முருகன், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 75 நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் அமிர்த ஏரிகள் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் முழுமையான வளர்ச்சிப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார். குல்காம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் மூலம், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து உள்ளூர் மீன் வளர்ப்போருடன் அவர் கலந்துரையாடினார்.
அப்பகுதியில் உள்ள மீன்வளர்ப்புப் பண்ணைகளையும் அவர் பார்வையிட்டார். உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலனடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
- காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது அவர்கள் அப்பாவி பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 2 ஏ.கே. 74 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள், போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் உறுதியான பலனைத் தந்துள்ளன.
உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு விகிதம் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றம் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் இருமடங்கு, அதாவது 265 சதவீதம் குறைந்துள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது என தெரிவித்தார்.
- 2022-ம் ஆண்டில் பாதுகாப்பு படையுடனான மோதலில் 172 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
- இதில் 42 வெளிநாட்டு பயங்கரவாதிகளும் அடங்குவர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் 93 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 42 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
அதில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர். 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர். 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆகும்.
கடந்த ஆண்டை காட்டிலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. 100 பேர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதில், 74 பேர் லஷ்கர் அமைப்பில் இணைந்தனர். பயங்கரவாத அமைப்பில் இணைந்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 360 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
- துப்பாக்கி ஏந்திய பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
- அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ரஜோரி மாவட்டம் டங்ரி கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என ஜம்மு போலீசார் தெரிவித்தனர்.
கிராமத்துக்குள் புகுந்து அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர்.
- குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அந்த கிராமத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். வேறு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது.
பரபரப்பு நிலவிய அந்த கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர். அந்த சமயத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதைத் தொடர்ந்து அலறல் சத்தம் எழுந்தது. அந்த வீட்டில் இருந்து படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர்.
காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பலியானது. காயம் அடைந்தவர்களில் மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
இதற்கிைடயே குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். தொடர்ந்துஅந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- கடந்த சில வாரமாக காஷ்மீரின் பல மாவட்டங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- இதனால் அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1800 வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பா.ஜ.க. உறுதியளித்த நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டடு என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் நமது வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்கள், குழந்தைகள் பலியாகினர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள மத்திய ரிசர்வ் படைப்பிரிவு போலீசார் 1,800 பேர் காஷ்மீரின் பூஞ்ச், மற்றும் ரஜோரி, அப்பர் தான்கிர ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.