என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி"
- பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்பதை இந்தியா தெரிவித்துவிட்டது.
- பாகிஸ்தானை விட்டு போட்டியை வேறு இடத்திற்கு மாற்றமாட்டோம் என பிசிபி உறுதி.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்காது எனத் தெரிவித்துவிட்டது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சோயிப் அக்தர் கூறுகையில் "பாகிஸ்தான் இந்தியாவை தனது மண்ணுக்குக்கு அல்லது பொதுவான இடத்திற்கு வரவழைத்து போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை என்றால் இரண்டு விசயங்கள் நடைபெறும்.
முதலில் ஸ்பான்சர்சிப்பில் மூலம் பெறும் வருவாயில் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் 100 மில்லியன் டாலர் (844 கோடி ரூபாய்) இழக்க நேரிடும். 2-வது இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து லாகூரில் விளையாடி தோற்றாலும் சரி வெற்றி பெற்றாலும் சரி, எது நடந்தாலும் சிறந்ததாக இருக்கும்" என்றார்.
- பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசினார்
- லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்ற சூழலே நிலவுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் [PCB] தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிசிசிஐ -க்கு பிசிபி கூறிய திட்டம் என்னவென்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டிக்கு மீண்டும் பாகிஸ்தான் வரலாம். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின்போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி கூறியுள்ளது.
தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வார இடைவெளி இருப்பதால் இது சாதியாமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திருப்ப ஏதுவாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடாது என பிசிசிஐ அறிவிப்பு.
- அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா விளையாட மறுப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளிலும் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐசிசி தொடர்களை புறக்கணித்தால் அது பின் விளைவை ஏற்படுத்தும் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரஷித் லத்தீப் கூறியதாவது:-
இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நீங்கள் மறுக்க முடியும். ஐசிசி தொடர்களை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஐசிசி திட்டத்தை வெளியிடும்போது, அவர்கள் எங்கே சென்று விளையாட வேண்டும் என்பது அணிகளுக்கு தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தன் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கிரிக்கெட் போர்டுகள் கையெழுத்திடுகின்றன.
1996 உலகக் கோப்பை தொடரின்போது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கை சென்று விளையாட மறுத்தது. இதனால் போட்டிகளில் விளையாடாமல் காலிறுதிக்கு முன்னேறியது. அதோடு உலகக் கோப்பையையும் வென்றது. இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பு தெரிவித்தால் அது பிசிசிஐக்கு பின் விளைவை ஏற்படுத்தும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வு செய்துள்ளது. இந்திய அணிகளின் ஆட்டங்களை ஒரே மைதானத்தில் நடத்த ஐசிசி-க்கு பரிந்துரைத்துள்ளது.
- 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐசிசியின் சாம்பியன் டிராபி தொடர் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் புள்ளி பட்டியலில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளன.
ஆனால் இன்னும் பாகிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலைகள் திருப்தியளிக்காத காரணத்தால் இந்தியா அந்நாட்டுக்கு சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டும். குறிப்பாக இருநாட்டுக்கும் இடையே நிலவும் தற்போதைய எல்லை பிரச்சினையும் விரிசலும் இதே போல நீடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசு அனுமதி கொடுக்காது என்று தெரிய வருகிறது.
அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை பொதுவான இடமாக கருதப்படும் துபாயில் நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அல்லது 2023 ஆசிய கோப்பை தொடரை போலவே பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அந்நாட்டிலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடமான துபாயிலும் நடைபெறும் என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஐஸ்லாந்தில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், நாங்கள் பின்வாங்குபவர்கள் அல்ல. 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான எங்களின் ஏலத்தை இன்று வெளியிட்டுள்ளோம். முடிவு குறித்து ஐசிசி-யின் இயக்குனர் கிரேக் பார்க்லே என்ன சொல்கிறார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறியது.
We are not people who hold back. We have today issued our bid to host the Champions Trophy of 2025, and we look forward to hearing what Greg Barclay of @ICC has to say about it. pic.twitter.com/EsRzsikCqF
— Iceland Cricket (@icelandcricket) November 27, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்