என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை இடிந்தது"

    • எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
    • பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரியபுலியூர் அருகேயுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரதீப் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

    இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பும்போது வீட்டில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • உயிரிழந்த கெர்மனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று பியூலா என்ற மனைவி உள்ளார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை சுல்தான்புரத்தில் வசித்து வருபவர் பொன்ராஜ் மகன் ஜான் சுந்தர் என்ற கெர்மன் (வயது 31). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    தற்போது மழை காலம் என்பதால் வேலை மிகவும் குறைவாக இருந்ததால் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு பழைய கட்டிடத்தில் பொருட்களை இடித்து எடுப்பதற்காக கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

    நேற்று வேலையை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பும்போது வீட்டில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கெர்மன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கெர்மனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று பியூலா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    • நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அரியமங்கலம், கீழ அம்பிகாபுரம், காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவர். இவர் தனது தாய் சாந்தி (வயது 70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாரிமுத்து தங்கையின் கணவர் சென்னையில் இறந்து விட்டார். இதனால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று சென்னைக்கு சென்று விட்டார். வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, குழந்தைகள் பிரதீபா, ஹரிணி ஆகியோர் இருந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் வழக்கம்போல வீட்டில் தூங்கினர். நள்ளிரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் தூங்கிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    உடனடியாக கீழே வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடந்ததும் இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருப்பதும் தெரியவந்தது அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 4 பேர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    புத்தாண்டு பிறந்து உலகமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×