என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிக வெற்றி"
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
- ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.
கான்பூர்:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன. சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி கடந்த 27-ம் தேதி கான்பூரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை (179 வெற்றி) பின்னுக்குத் தள்ளி இந்தியா (180 வெற்றி) 4வது இடத்திற்கு முன்னேறியது.
இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா (414 வெற்றி), இங்கிலாந்து (397 வெற்றி), வெஸ்ட் இண்டீஸ் (183 வெற்றி) ஆகிய அணிகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 179 வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது.
- ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவுசெய்தது.
- இந்தப் பட்டியலில் இந்திய அணி 3- வது இடத்தில் உள்ளது.
துபாய்:
ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸ் அணியை வென்றதன் மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி 12 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணியுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
மேலும், மலேசியா மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் 13 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
செயின்ட் லூசியா:
செயின்ட் லூசியாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்து 92 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 31 ரன், ஷிவம் துபே 28 ரன், பாண்ட்யா 27 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 50 போட்டிகளில் 34-ல் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகியவை உள்ளன.
- முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ஆன்டிகுவா:
ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 37 ரன், ரிஷப் பண்ட் 36 ரன், ஷிவம் துபே 34 ரன், ரோகித் 23 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா சமன்செய்துள்ளது.
இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 49 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை தலா 30 போட்டிகளில் வென்றுள்ளன.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்தது.
ராய்ப்பூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் அதிரடியாக ஆடிய இந்தியா 20 ஓவரில் 174 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா தொடர் வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையையும் படைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்