என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இணைய சேவை முடக்கம்"
- காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.
- 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த போட்டித் தேர்வின் (JGGLCCE) முறைகேடுகளைத் தடுக்க, மாநிலம் முழுவதும் விரிவான இணையத் தடையை ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுவதை ஒட்டி, காலை 8 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முழுவதும் மொபைல் இணையம், மொபைல் டேட்டா மற்றும் மொபைல் வைஃபை சேவைகளை அனைத்து சேவை வழங்குநர்களிடமிருந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த காலகட்டத்தில் நிலையான தொலைபேசி இணைப்புகள் வழியாக கால் அழைப்பதற்கும்பிராட்பேண்ட் இணைப்பு தொடர்ந்து செயல்படக்கூடும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இதுகுறித்து ஜார்கண்ட் அரசு கூறுகையில், "முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் சில நேர்மையற்ற நபர்கள் பல்வேறு மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதிய சம்பவம் நடந்தது."
ஏறக்குறைய 650,000 பேர் பரீட்சைக்கு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அது "இலவசமாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்" நடத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
- காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
- உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3-வது மாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
காசா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு, மத்திய, தெற்கு காசா என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.
நேற்று இரவு கான் யூனிஸ் நகரில் குண்டுகள் வீசப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 179 பேர் பலியாகி உள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் ராணுவம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் ஆஸ்பத்திரியில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி வருவதால் அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள், டாக்டர்கள் தவித்து வருகிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் மீண்டும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலஸ்தீனிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறும்போது, காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளன. காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், காசாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப்பட்டதால் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடைவது கடினமாக இருக்கும் என்று தெரிவித்தது.
இணைய சேவை மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக காசாவில் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில் காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க தேசிய பாது காப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இஸ்ரேல் பிரத மர் பெஞ்சமின் தென்யாகு வுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, வரும் நாட்களில் ஹமாஸ் மீதான போரை குறைக்குமாறு தெரிவித்தார். காசாவில் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்ற இஸ்ரேல் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.
- செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை.
- சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
சென்னை:
மழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் 2 நாட்களாக இருளில் மக்கள் மூழ்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று இணைய தள சேவையும் முடங்கியது. அனைத்து தனியார் நிறுவனங்களின் செல்போன் இணைப்புகளும் செயல்படவில்லை. செல்போன் சேவை செயல் இழந்ததால் தகவல் பரிமாற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழை பாதிப்பு, நிலவரம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்ட மக்கள் அவை செயல் இழந்ததால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஏற்கனவே மின்சாரம் இல்லாததால் டி.வி., கேபிள் டி.வி. செயல்படவில்லை. இந்த நிலையில் இண்டர்நெட், வாட்ஸ் அப் சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் சென்னையில் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.
இதனால் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வீடுகளில் இருளில் முடங்கிய மக்களுக்கு தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருந்தது. ஆனால் அவை இன்று 2-வது நாளாக முடங்கியதால் யாரையும் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஒரு சில பகுதிகளில் இன்று மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மோட்டார் பம்ப் செட், மிக்சி, செல்போன் சார்ஜர் செய்வது போன்றவை பயன்பாட்டிற்கு வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்