search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மருத்துவர்"

    • முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.
    • போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டாக்டர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.

    முதல்வர் மம்தா பானர்ஜியை, மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். ஆனால், மருத்துவர்களின் நேரலை கோரிக்கையை ஏற்க மம்தா அரசு மறுத்ததால், இருதரப்பு சந்திப்பு நடைபெறாமல் போனது.

    இதைதொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    மேலும், " பதவி குறித்து கவலைப்படவில்லை, எனக்கு நீதிதான் முக்கியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நோயாளி மருத்துவரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 24-ந்தேதி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் சரமாரி தாக்கி உள்ளார். இதன் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் நோயாளி ஒருவர் டாக்டரை துரத்தி சென்று அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தலையை ஒரு உலோக படுக்கையில் வைத்து இடித்து சரமாரி தாக்குகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலை நடத்திய நோயாளி வீசியங்கரம் மாவட்டம் பொப்பிலியை சேர்ந்த பங்கரா ராஜூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வலிப்பு நோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பல இளநிலை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழக துணைவேந்தர் டாக்டர் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோக்கை விடுத்துள்ளார்.


    • திருப்பதி தேவாஸ்தன மருத்துவமனையில் பெண் மருத்துவர் தாக்கப்பட்டார்.
    • மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

    திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பெண் மருத்துவரை தாக்கிய நபர் மன நோயாளி என்று தெரியவந்தது. மன நல சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவரை தாக்கியுள்ளார். பெண் மருத்துவர் தாக்கப்பட்டது, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலும், மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா (வயது26).

    இதற்காக அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனை இரவு பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் தங்கியிருந்த குடுயிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் ஷஹானா சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனால் அதர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷஹானா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.

    அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என்று மட்டும் எழுதியிருந்தார். அதனடிப்படையில் ஷஹானா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன.

    ஷஹானாவுக்கும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதாகவும், அதனை தராவிட்டால் திருமணம் நடக்காது என்றும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதிக தொகை வரதட்சணையாக கேட்டதால் ஷஹானா குடும்பத்தினரால் அந்த தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக ஷஹானாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்து அவரது நண்பர் பின்வாங்கியதாக தெரிகிறது. திருமணம் முடிவில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் பின் வாங்கிய வேதனையில் ஷஹானா தற்கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுகலை படிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×