என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றம் தாக்குதல்"
- காரில் வந்த 9 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- பாதுகாப்புப்படையினர் ஐந்து பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.
கடந்த 2001-ம் ஆண்டு பலத்த பாதுகாப்பையும் தாண்டி இந்திய பாராளுமன்ற வளாகத்தில் ஒரு காரில் 9 பயங்கரவாதிகள் வந்து தாக்குதல் நடத்த தொடங்கினர். அவர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்ட போது பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்கள் சதியை முறியடித்தனர்.
பயங்கரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையிலான சண்டையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாதுகாப்புப்படையினர், டெல்லி போலீசார் என 14 பேர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டபோது எம்.பி.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பாராளுமன்றத்திற்குள் இருந்தனர்.

பாராளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 22 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப்படையினர் படங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் ஆகியோர் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடினர்.
- இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர்.
- ஒருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். மேலும், இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர். ஒருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். மேலும், இருவரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.
பின்னர் பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கி பிடித்தனர்.
அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது. அவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பலத்த பாதுகாப்பிற்குப் பிறகே மக்களவையில் பார்வயைாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு சென்றது அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- பாராளுமன்ற மக்களவையில் இருவர் நுழைந்து வண்ண புகை குண்டு வீசினர்.
- உயர்மட்ட விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்து ஓடினர்.
தொடர்ந்து அவர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் அதே சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தை பாதுகாக்க துணை சபாநாயகர் இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ள நிலையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக மக்களவையில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின் துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார்கள். துணை சபாநாயகர் பதவி கூட்டணி கட்சி அல்லது எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். ஆனால் பல ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமல் சபை செயல்பட்டு வருகிறது.
சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத நேரத்தில், பா.ஜனதா எம்.பி.க்களும் ஒருவர் அவையை வழிநடத்துவார். துணை சபாநாயகர் இருந்தால், அவர்தான் பாராளுமன்ற பாதுகாப்பு குறித்த அம்சங்களை கவனிப்பார்.
2001 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு துணை சபாநாயகர் தலைமையில்தான் கூட்டு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு ஒத்திகை
சோம்நாத் சட்டர்ஜி சபாநாயகராக இருக்கும்போது, சரண்ஜித் சிங் அத்வால் துணை சபாநாயகராக இருந்தார். அப்போது பல பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது இவ்வாறு நடத்தப்பட்டதற்கு அரசு மற்றும் எம்.பி.க்களிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
2007-ல் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பாராளுமன்றம் மூடப்பட்டது.
தற்போது புது கட்டடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கும் என நினைத்திருக்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
விமான நிலையம் போன்று
இதனால் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள உடல் முழுவதும் பரிசோதனை செய்யும் இயந்திரம் (body scanner machines) பாராளுமன்றத்தில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
- ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்திருக்கிறார்.
- எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் புகைகுப்பிகள் மூலம் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த 6 இளைஞர்களும் சமூக வலைத்தளத்தில் உள்ள "பகத்சிங் பேன் கிளப்" என்ற இணைய தளம் மூலம் ஒருங்கிணைந்தது தெரியவந்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் 6 பேரும் மைசூரில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் 6 பேரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரியவந்தது.
அரசு மீது உள்ள கோபம், வெறுப்பு காரணமாக அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று 6 பேரும் திட்டமிட்டனர். இதற்காக அடிக்கடி டெல்லியில் கூடி பேசினார்கள்.
அப்போதுதான் பாராளுமன்ற தாக்குதல் தினமான டிசம்பர் 13-ந்தேதி பாராளுமன்றத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரு புதுமையான தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். கடந்த ஆண்டே அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.
இதற்காக 6 பேரும் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு வந்து சென்றனர். அவர்களில் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்திருக்கிறார்.
எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் 4 அடுக்கு பாதுகாப்பில் உடல் முழுவதையும் சோதனை செய்தாலும் காலில் அணிந்து செல்லும் ஷூவை கழற்றி ஆய்வு செய்யவில்லை என்பதை அறிந்தனர்.
எனவே தாக்குதல் நடத்தும் பொருளை ஷூவுக்குள் மறைத்து எடுத்து செல்ல தீர்மானித்தனர். அதன்படிதான் ரூ.1200-க்கு புகைக்குப்பிகள் வாங்கி ஷூவுக்குள் எடுத்து வந்துள்ளனர்.
தாக்குதலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் அவர்கள் பாராளுமன்ற பகுதியில் ஒத்திகை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்காக கடந்த வாரம் 6 பேரும் ஒருங்கிணைந்து உள்ளனர். டெல்லி புறநகர் பகுதியான குருகிராமில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
- மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் எம்.பி.க்கள் இடத்திற்குள் குதித்தனர்.
- மஞ்சள் நிற வண்ண புகை குண்டுகள் வீசிய அவர்களை எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மடக்கி பிடித்தனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர்.
இதனால் மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் மக்களவை கூடியது. அப்போது பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கிடையே 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
- 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும்.
- பாராளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று சபை கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் சபைக்குள் குதித்தனர்.
அவர்கள் இருவரும் தங்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகை குப்பிகளை திறந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த புகை குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
புகை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவி குதித்து அங்கும் இங்குமாக ஓடினார். இதனால் எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில் சில எம்.பி.க்கள் மட்டும் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.
மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த போதே பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகை குப்பிகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதற்கிடையே இவர்கள் 4 பேருடன் வந்திருந்த 2 பேர் தப்பி சென்றது தெரியவந்தது. அவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
6-வது நபரான லலித் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். அவரிடம் தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன. எனவே அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் பாராளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் வழக்கமாக 4 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் உள்ளது. பாராளுமன்றத்துக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள வரவேற்பு அறையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்வார்கள்.
அப்போது பார்வையாளர்களின் அடையாள அட்டை, கைப்பை, போன் போன்றவை ஆய்வு செய்யப்படும். போன் மற்றும் பைகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.
2-வது கட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் பார்வையாளர்களின் நுழைவு சீட்டு ஸ்கேன் செய்து ஆய்வு செய்யப்படும். பார்வையாளர்களின் அடையாள அட்டை உண்மையானது தானா என்பதும் பரிசோதிக்கப்படும். மீண்டும் மெட்டல் டிடெக்டர் மூலம் பார்வையாளர்களை அங்கு சோதனை செய்வார்கள்.
3-வது கட்டமாக பாராளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்கு பார்வையாளர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கும் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்படும். பார்வையாளர்களின் நுழைவு சீட்டு மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்படும்.
4-வது கட்டமாக பார்வையாளர்கள் பாராளுமன்ற மாடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அதற்கு முன்னதாக மீண்டும் ஒருதடவை பார்வையாளர்கள் சோதிக்கப்படுவார்கள்.
இத்தகைய 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும். இந்த 4 கட்ட சோதனைகளையும் தாண்டி 2 இளைஞர்கள் புகை குப்பிகளை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியாக மாறி உள்ளது.
இதையடுத்து பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் யாரும் இந்த கூட்டத்தொடருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவை, மாநிலங்களவை, பார்வையாளர் மாடம் மூடி சீல் வைக்கப்பட்டது.
அதுபோல பார்வையாளர்களுக்கு நுழைவு சீட்டு வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்துக்குள்ளேயும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் இனி எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில புதிய பாதுகாப்பு அம்சங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி விமான நிலையங்களில் நடத்தப்படுவது போன்று முழு உடல் பரிசோதனைக்கான ஸ்கேனர் கருவிகள், எந்திரங்கள் பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.

இது தவிர பார்வையாளர்கள் அனைவரையும் இனி முழுமையாக சோதிக்க கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இருக்கைக்கும், பார்வையாளர்களின் மாடத்துக்கும் இடைப்பட்ட பகுதி மிக குறுகியதாக உள்ளது.
இதைப்பயன்படுத்தி தான் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்களும் மிக எளிதாக சபை உள்ளே குதித்து விட்டனர். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வு நடப்பதை தடுப்பதற்காக பார்வையாளர் மாடத்தில் கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்றத்துக்குள் மந்திரிகள், எம்.பிக்கள் நுழைய தனி வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஊழியர்கள், செய்தியாளர்கள் தனி வழியில் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மந்திரிகளின் உதவியாளர்களையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று பாராளுமன்றம் கூடிய போது மந்திரிகள், எம்.பி.க்களுடன் வந்த உதவியாளர்கள் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பாராளுமன்றத்துக்குள் வருபவர்களை கண்காணிக்க ஏற்கனவே ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. நேற்று நடந்த அத்துமீறலை தொடர்ந்து இன்று உடனடியாக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதன் மூலம் பாராளுமன்றத்துக்குள் வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசம் எழுப்பினர். மேலும், விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோசமிட்டனர்.
இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "அனைவரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விசயம் குறித்து நீங்கள் (சபாநாயகர்) அறிந்துள்ளீர்கள். பாராளுமன்ற பார்வையாளர்கள் அனுமதி சீட்டு வழங்கும்போது நாம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை பிரதமர் மோடி மந்திரிகளுடன் பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
- தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவம் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதை தான் குறிக்கிறது. பாராளுமன்றத்திற்குள் ஒரு குண்டூசி கூட எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் எப்படி அவர்களை விட்டார்கள் என்று தெரியவில்லை.
அங்கு அத்துமீறி சென்றவர்கள் எங்களால் முடியும் என நிரூபித்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.டெல்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை பலப்படுத்த வேண்டும்.
கவர்னர் முதலமைச்சரை அழைத்தாரா என்பது எனக்கு தெரியாது. சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
2 இடங்களில் அந்த சாத்தியக்கூறுகள் உள்ளது. ராமஞ்சேரி பகுதியில் பெரிய டேம் அமைக்கலாம். ஆனால் இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அதேபோல் மற்றொரு இடத்திலும் கடந்த ஆட்சியில் நீர் நிலை அமைக்க பணிகள் தொடங்கபட்டது. அதுவும் பாதியில் கைவிடப்பட்டது.
தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும்.
தமிழகத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். பொதுமக்கள் எதிர்ப்பதால் படாதபாடு பட வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
- நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விவரம்:-
கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், நடராஜன், கௌதம சிகாமணி, பென்னி பெஹனன், ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், பிரதாபன், டெரிக் ஓப்ரையன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டதற்காக எதிர்கட்சி எம் பி க்கள் பத்துக்கும் மேற்பட்டோர் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். pic.twitter.com/cmrEE6xsL5
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 14, 2023
- அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது.
- பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர்.
* அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுக்கிறார்.
* பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர்.
* நாளைக்கு எங்களையும் சஸ்பெண்ட் செய்வார்கள்.
* அனைத்தையும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது.
* விசாரணை நடத்துவதாக கூறுகின்றனர். என்ன விசாரணை நடத்த போகிறார்கள் என தெரியவில்லை.
* பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 301 பேரில் 176 பேர்தான் பணியில் உள்ளனர்.
* பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை:
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 15 பேரின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.
பா.ஜ.க. அரசின் சகிப்புத்தன்மையற்ற செயலைக் கண்டிக்கிறேன்.
பாராளுமன்றம் விவாதம் நடத்தும் அவையாக இருக்கவேண்டும்.
எம்.பி.க்களின் கருத்துரிமையைப் பறிப்பது புதிய பாராளுமன்ற விதிமுறையா?
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எம்பிக்களை தண்டிப்பதா?
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயல்படக் கூடாது.
எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்றன எதிர்க்கட்சிகள்.
- இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவை நடைபெற்றபோது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் அவை நடைபெறும் இடத்திற்குள் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறி புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 7 நாள் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.