என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய ரெயில்வே அமைச்சர்"

    • டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    • ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவு.

    திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட விரைவு ரெயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் ரெயில்வே அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    • கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
    • தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

    அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.

    தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.

    அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.

    மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை.
    • 'தூத்துக்குடி' குறித்து கேட்கப்பட்ட கேள்வியை ‘தனுஷ்கோடி' என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன்.

    மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என வெளியான செய்திக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

    அதன்படி, மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை.

    கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள ICF-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தொழிற்சாலையில் அதிக இரைச்சல் இருந்ததால் செய்தியாளரின் கேள்வி தெளிவாக கேட்கவில்லை.

    'தூத்துக்குடி' குறித்து கேட்கப்பட்ட கேள்வியை 'தனுஷ்கோடி' என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன்.

    தனுஷ்கோடி ரயில்பாதை திட்டத்தையே சுற்றுச்சூழல், நிலப்பிரச்னை காரணமாக கைவிடுமாறு தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.

    இது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமே தவிர, மதுரை - தூத்துக்குடி திட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    • கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
    • மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.

    ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.

    கும்பமேளாவில் 30, 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சாதனையாக கூறுகிற பா.ஜ.க. அரசு எத்தனை பேர் கும்பமேளாவில் இறந்தார்கள் என்ற முழு விவரத்தை இன்று வரை வெளியிடத் தயாராக இல்லை.

    இன்னும் பலர் காணாமல் போன விவரமும் தெரியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்.

    குறிப்பாக கும்பமேளாவில் நீராட சென்றவர்கள் பலியானதற்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் ரெயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான இவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா?

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரீகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன்.

    மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனை வரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைப்பு.
    • 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டம்.

    நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

    26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதேபோல், சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இது குறித்து ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. அதில் முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

    • டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.

    டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    புதுடெல்லி ரெயில் நிலையத்தில் அணுகல் கட்டுப்பாடு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பயணிகள் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால், அவர்கள் நேரடியாக நிலையத்திற்குள் செல்வார்கள். டிக்கெட் கிடைக்காதவர்கள் முதலில் ஹோல்டிங் ஏரியாவுக்கு நேரடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கான கவுன்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே ஸ்டேஷனுக்குள் நுழையும் வகையில் ஹோல்டிங் ஏரியாவில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வடக்கு ரெயில்வே போர் அறையில் இந்த ஆய்வு நடக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.
    • விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

    மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர் என்று பொய் பேசுவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சர் வெட்கப்பட வேண்டும் என்றார்.

    இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய ரெயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, இன்று திருச்சி விமானநிலையத்தில் பேசும் போது, 'மகா கும்பமேளாவிற்கு ரெயிலில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நிம்மதியாக சென்று வந்தனர்' என்று கூறியுள்ளார். இதுபோன்று பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்.

    கும்பமேளாவிற்கு ரெயில் சென்று வந்தவர்கள் சொல்லொண்ணா சிரமத்தை அனுபவித்தார்கள். ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் பயணிகள் ரெயிலை அடித்து உடைத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் நாடே பார்த்தது.

    தமிழ்நாடு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பிரக்யாராஜுக்கு சென்று ரெயிலில் மீண்டு வரமுடியாத நிலையில் அவர்களை விமானம் மூலம் தமிழ்நாடு அரசு அழைத்து வந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

    தொலைதூரப் பயணத்திற்கு சாமானியர்களின் வரப்பிரசாதமாக உள்ள பொதுப்பெட்டிகளை குறைத்து, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது ரெயில்வே அமைச்சகம்.

    நிலை இவ்வாறு இருக்கையில் பயணிகள் சிரமம் இன்றி கும்பமேளாவிற்கு சென்று வந்தார்கள் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×