search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஷா யோக மையம்"

    • ஈஷா யோக மையத்தினர் மீது பதியப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லை.
    • எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்ய நுழைந்தனர் என கேள்வி எழுப்பினார்.

    கோவை:

    ஈஷா யோகா மையம் முறையான அனுமதிகளைப் பெற்று நவீன எரிவாயு மயானம் ஒன்றை அமைத்து வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் சிவஞானம், சுப்ரமணியன் மற்றும் காமராஜ் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக ஈஷா மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் தொடர்பில்லாத நபர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி த.பெ.தி.க.வை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற நபரின் தலைமையில் சில உதிரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான்தோன்றித்தனமாக 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில் ஈஷாவின் மயானக் கட்டுமானப் பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சி செய்தனர். அவர்களை காவல்துறையினரும், கிராம மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    இதையடுத்து, ஈஷாவிற்குள் நுழைய முயன்று முடியாமல் போனதன் காரணமாக ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஈஷா யோக மையத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லை. மயான கட்டுமானப் பகுதிக்குள் நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறி நுழைய முயற்சித்த த.பெ.தி.கவை  சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இவர்கள் ஈஷா யோக மையத்தில் ஆய்வுசெய்ய நுழைந்தனர் என த.பெ.தி.க. நடவடிக்கை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    • மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.
    • 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கி தொடங்கியது. மகா சிவராத்திரி கொண்டாட்டம் நாளை அதிகாலை வரை நடக்கிறது.

    விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

    மேலும், துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஈஷா யோக மையத்தில் தொடங்கியுள்ள மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்றுள்ளனர்.


    • துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

    கோவை:

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடக்கிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

    இதற்காக ஜகதீப் தன்கர் இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

    பின்னர் சாலை மார்க்கமாக ஜகதீப் தன்கர் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். மாலை 5.40 மணி முதல் இரவு 7 மணி வரை அவர் அங்கு நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் மீண்டும் கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோகா மையம் வரை சுமார் 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


    ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். மேலும் பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி உள்ளிட்ட வெளிமாநில கவர்னர்களும் பங்கேற்கிறார்கள்.

    இதுதவிர மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி பிரதிமா பவுமிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர்.
    • வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை

    ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு "சப்தரிஷி ஆரத்தி" சிறப்பாக நடைபெற்றது.

    இந்த "சப்தரிஷி ஆரத்தி", சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. ஈஷாவில் இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளான நேற்று விமர்சையாக நடைபெற்றது.


    இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவக்கினர்.

    அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 8:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது. இந்தாண்டு சயன ஆரத்தியை காசி உபாசகர்களுடன் முதன் முறையாக ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் முழுநேர தன்னார்வலர்களும் சேர்ந்து நடத்தினர்.


    வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற 'காசி விஸ்வநாதர் கோவிலில்' பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.

    ×