search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு செயற்குழு"

    • திருவண்ணாமலையில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
    • சரியான முறையில் கொரோனா பரவலை தடுக்க முடியாமல் திணறியது தி.மு.க.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் பல புயல்கள் வந்தன; புயல் வேகத்தில் செயல்பட்டு, புயலின் அடிச்சுவடே இல்லாமல் பணி செய்தோம்.

    * திருவண்ணாமலையில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இதற்கு விவசாயிகள் தகுந்த பதிலடி தருவார்கள்.

    * ஊழல் செய்தததில் தான் சாதனை செய்தனர். வேறு என்ன சாதனை செய்தனர்? சரியான முறையில் கொரோனா பரவலை தடுக்க முடியாமல் திணறியது தி.மு.க.

    * 520 வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்பட்டதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நடத்தவும் தெரியவில்லை. ஆட்சி நடத்தவும் தெரியவில்லை.

    * மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது.

    * மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசின் நிதி மூலம் மக்களை காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்ததாக வரலாறு இல்லை.

    * மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் பா.ஜ.க. ஆண்டாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தமிழ்நாட்டை பார்க்கிறது.

    * நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அ.தி.மு.க. தான்.
    • கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது அ.தி.மு.க.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    * மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க.

    * உயிரோட்டம் உள்ள அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

    * எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்தியது அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு பணியாற்றியதால் தான் மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம்.

    * அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அ.தி.மு.க. தான்.

    * கணக்கு தெரியாத அளவுக்கு அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் பாய்கிறது.

    * எதிரிகளை சட்ட நுணுக்கத்தோடு கையாள வேண்டும்.

    * கைகோர்த்து செயல்பட்ட எதிரிகள், துரோகிகளை வென்று காட்டியது அ.தி.மு.க

    * அ.தி.மு.க. இனி ஜெட் வேகத்தில் செயல்படும்.

    * கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது அ.தி.மு.க.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகளில் சமீபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளில் சமீபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.


    இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    * இலங்கை தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

    * மக்களவை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய அரசு பாதுகாப்பை வலுப்படுத்த கோரிக்கை விடப்பட்டது.

    * பாராளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தல் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை 10.35மணிக்கு மேல் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூட்டம் தொடங்கியுள்ளது.


    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்ட அரங்கில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டத்தில் பங்கேற்க 300 செயற்குழு உறுப்பினர்கள், 2800 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

    அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெள்ள மீட்பு பணியில் சிறப்பாக செயல்படாத தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

    இக்கூட்டத்தில் பங்கேற்க 300 செயற்குழு உறுப்பினர்கள், 2800 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


    காலை 10 மணிக்கு தொடங்க உள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் வந்த வண்ணம் உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க வரும் அ.தி.மு.க.வினருக்கு காலை, மதியம் உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தின் நுழைவு வாயில் பழைய பாராளுமன்ற கட்டடத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    ×