search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி ரெயில் நிலையம்"

    • அயோத்தி ரெயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
    • உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறுகிறது.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

    இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. பிளாட்பாரங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறவுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்.

    ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி சாலையின் வழியாக பேரணி செல்கிறார்.

    இந்நிலையில், அயோத்தி ரெயில் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அயோத்யா தாம் ரெயில் நிலையம் உலகத்தரத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தின் இரு புறங்களிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • அயோத்தி ரெயில் நிலையம் என்ற பெயர் மாற்றப்படுகிறது.
    • ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படுவதாக எம்.பி. லல்லு சிங் தெரிவித்து உள்ளார். டிசம்பர் 30-ம் தேதி ரெயில் நிலையத்தை பிரதமர் மோடி நேரில் திறந்து வைக்க இருக்கும் நிலையில், அயோத்தி ரெயில் நிலையம் என்ற பெயர் "அயோத்தி தாம்" என மாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



    "பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி அயோத்தி ரெயில் நிலையம் என்ற பெயர், 'அயோத்தி தாம்' என்று மாற்றப்படுகிறது. பொது மக்கள் எதிர்பார்ப்புக்கு இணங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அயோத்தி ரெயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்படுகிறது," என்று லல்லு சிங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    புதிய ரெயில் நிலையத்தை வரும் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ரெயில் நிலையத்தில் 12 லிஃப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    • உ.பி.யின் அயோத்தி ரெயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
    • ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பல லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

    இதற்கிடையே, அயோத்தி ரெயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. பிளாட்பாரங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.


    வெயிலால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறவுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி சாலையின் வழியாக பேரணி செல்கிறார். விமான நிலையம் அருகே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார் என அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள் தெரிவித்தார்.

    ×