search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைரன் சிங்"

    • பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின.
    • கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.

    மத்திய அரசு தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்த நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தன்னை பேச விடவில்லை எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

    இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மோடியை தனியாகச் சந்தித்து மாநிலத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்துப் பேசாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்த்தேய் குக்கி இனக்குழுக்களுக்கிடையில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கலவரம் வெடித்தது.

    கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது, பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின. இந்த கலவரத்தில் சுமார் 221 பேர் உயிரிழந்துள்ளனர் 60,000 பேர் தங்களின் வீடுகளை இழந்து ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

    ஒரு வருடம் ஆகியும் மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த கலவரங்கள் குறித்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மவுனம் காத்து வந்ததது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மோடியின் மணிப்பூர் மவுனம் பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் மோடி இன்னும் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்காதது விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.

    அதுவும் நிதி நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும்,, பாஜக முதல்வர்கள் கூட்டத்திலுமே பைரன் சிங் பங்கேற்றுள்ளார். மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவில்லை. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ், நமது பயலாஜிக்கலாக பிறக்காத பிரதமர் பங்கேற்ற நிதி ஆயோக்கிலும், அதே கடவுளின் முன் நடந்த பாஜக முதல்வர்கள் கூட்டத்திலும் பைரன் சிங் பங்கேற்றார்.

    எங்களது கேள்வியெல்லாம், மே 3 2023 இரவு முதல் எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் குறித்து மோடியை தனியாகச் சந்தித்துப் பேசி, அங்கு வந்து பார்வையிடுமாறு ஏன் பைரன் சிங் அழைக்கவில்லை. சமீபத்தில் ரஷியா செல்வதற்கு முன்னால்தான் வரவில்லை. தற்போது உக்ரைன் செல்வதற்கு முன்னாலாவது மணிப்பூரை வந்து பாருங்கள் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளது. 

     

    • மிக முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம்.
    • அரசு விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.

    மாநில மக்களின் நலன் கருதி மத்திய அரசு விரைவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த பிறகு, முதலமைச்சர் பைரன் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பின் போது, மாநிலம் தொடர்பாக மிக முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். மணிப்பூர் மக்கள் நலன் கருதி மத்திய அரசு விரைவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.


     

    கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இது தொடர்பான தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்றும் இந்த மோதல் நிலை முடிவுக்கு வராத நிலையில், அவ்வப்போது அம்மாநிலத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.

    இதனிடையே கலவரம் ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நான்கு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். எனினும், அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தான் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் உள்துறை மந்திரி இடையேயான சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. 

    • துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
    • முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் லிலாங் சிங்காவ் பகுதிக்குள் காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி நடத்திய திடீர் துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தௌபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

     


    திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் மூன்று நான்கு-சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.  

    ×