search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை"

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது.
    • எங்களின் 2-வது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம் என்றார்.

    மும்பை:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தின் துலே பகுதியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

    எங்களின் இரண்டாவது இந்திய ஒற்றுமை யாத்திரையில் நியாய என்ற புதிய வார்த்தையைச் சேர்த்துள்ளோம்.

    ஏனென்றால் எங்களின் முதல் யாத்திரையில் விவசாயிகள், இளைஞர்கள் அல்லது பெண் யாராக இருந்தாலும், வன்முறைக்கும் வெறுப்புக்கும் காரணம் சொன்னது அநீதிதான்.

    90 சதவீதம் இந்தியர்கள் அநீதியை எதிர்கொள்கிறார்கள் தினமும்.

    இது உங்களுக்கெல்லாம் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள 22 பேரின் சொத்து, 70 முக்கிய நபர்களின் சொத்துக்கு சமம் என தெரிவித்தார்.

    • அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம்.
    • மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், கோட்டாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் தொடர்புடைய மசோதாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.

    அதானியின் பெயரை எடுத்துக்கொண்டாலே பிரதமர் மோடி தான் அவரது மூலதனம் என்பதை மக்கள் ஒரு நொடியில் புரிந்து கொள்வார்கள்.

    பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாடு முழுவதும் வெறுப்பை பரப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.
    • இந்த யாத்திரையால் ஊழல் முதல் மந்திரி ஹிமந்தா பீதி அடைந்துள்ளார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் தொடங்கி உள்ளார். இந்த யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.

    அசாமின் லக்கிம்பூருக்குச் சென்றபோது யாத்திரையில் பங்கேற்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன.

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜ.க. குண்டர்களால் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பேனர் கிழிப்பு போன்ற வெட்கக்கேடான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. முயற்சிக்கிறது. மக்களின் குரலை நசுக்கி. அதன்மூலம் ஜனநாயகத்தை சிதைக்கிறது. அசாம் பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல் மற்றும் தாக்குதல் தந்திரத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது என பதிவிட்டுள்ளார்.


    • நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
    • நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது

    அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்க உள்ள யாத்திரை அரசியல் காரணங்களுக்காக அல்ல. நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் வெறுப்புக்குப் பதிலாக அன்பு பரவ வேண்டும் " என்பதை இந்த யாத்திரையில் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், வன்முறை காரணமாக மணிப்பூர் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டுக்கு சொல்லவே யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

    நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு குறித்தும் இந்த யாத்திரையில் நாங்கள் பேசு இருக்கிறோம். இளைஞர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நீதி வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த யாத்திரையை தொடங்குகிறோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான மிகப் பெரிய மேடையாக இந்த யாத்திரை திகழும் என்றார்.

    நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கே.சி வேணுகோபால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு அனுமதி கோரி மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விண்ணப்பம் கொடுத்த நிலையில், அனுமதியை தங்களால் வழங்க முடியாது என்றும், டெல்லியில் இருந்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மணிப்பூர் அரசு கூறுவதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் குற்றம் சாட்டுகிறார். ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்த விரும்பினால் அதற்கு டெல்லி அனுமதி வழங்க வேண்டுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    ×