என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இண்டிகோ நிறுவனம்"

    • 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
    • தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.

    ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இந்த நிலையில், மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும், காலநிலை சீராகும் போது சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இவை தவிர வெளிநாட்டு சேவைகளாக பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி தினமும் காலை 6 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்படுவது வழக்கம்.

    இந்த விமானம் இன்று காலை ஐதராபாத் நோக்கி புறப்படுவதற்கு தயாரானது.

    இதில் 120 பயணிகள் பயணம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

    எனினும் அதனை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து அதில் பயணிகள் ஐதராபாத் செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மாற்று விமானம் ஆனது மதியம் 12.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

    ×