என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்லைன்ஸ்"

    • நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
    • ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.

    இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.

    அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
    • ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

    பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

    2010 ஆம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரத்தன் டாடா, "அமைச்சர் ஒருவருக்கு 15 கோடி கொடுத்தால் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஒரு தொழிலதிபர் எனக்கு ஆலோசனை கூறினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.

    அப்போது அந்த தொழிலதிபர், "நீங்கள் ஏன் அமைச்சருக்கு பணம் கொடுக்கக்கூடாது. அமைச்சருக்கு 15 கோடி தேவைப்படுகிறது. உங்களுக்கு விமான ஒப்பந்தம் தேவையில்லையா? நீங்கள் ஒரு முட்டாள்" என்று அவர் கூறினார்.

    "உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை. நான் பணம் கொடுத்து விமான ஒப்பந்தம் பெறவில்லை என்று தெரிந்த பின்பு இரவு வீட்டிற்கு சென்று தூங்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்திற்காக நான் அவருக்கு பணம் கொடுத்திருந்தால் நான் மிகவும் அவமானமாக உணர்ந்திருப்பேன்" என்று அவரிடம் தெரிவித்ததாக ரத்தன் டாடா கூறினார்.

    ஆனால் அந்த அமைச்சர், தொழிலதிபரின் விவரங்களை ரத்தன் டாடா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி நிலையில் 103 வது இடத்தில் உள்ளது
    • கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

    உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி ஏர்ஹெல்ப் நிறுவனம் வருடந்தோறும் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    வாடிக்கையாளரின் மதிப்பீடும், சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 54 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளின் கருத்தை பெற்று 2024 ஆம் ஆண்டின் ஏர்ஹெல்ப் அறிக்கை வெளியாகியுள்ளது.

    விமான நிறுவனங்கள் திடீர் இடையூறுகளை எவ்வாறு கையாளுகின்றன, இழப்பீடு கோரிக்கைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன, சர்வதேச வழித்தடங்களில் நிலையான சேவையை எவ்வாறு வழங்குகின்றன உள்ளிட்ட தரவுகளும் இந்த அறிக்கைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

     

    மொத்தம் 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது. மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103 வது இடத்தில் உள்ளது. சரியான நேரத்தில் வழங்கப்படும் சேவை, வாடிக்கையாளர் சர்வீஸ் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில் இண்டிகோ பின்தங்கியுள்ளது.

     

    இண்டிகோவை தவிர்த்து துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸ் 104 வது இடத்திலும், இஸ்ரேலின் எல் அல் ஏர்லைன்ஸ் 105 வது, பல்கேரியா ஏர் 106, நேவால் துனிசியா 107, போலந்து buzz 108, துனிசியாவின் துனிஸ் ஏர் 109 வது இடங்களில் உள்ளன. மாறாக சிறந்த 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ்முதல் இடத்தில் உள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. 

     

    • விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.
    • செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது.

    ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

    பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் ஏர் கனடா 2259 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் இன்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்தது.

     

    தரையிறங்கும் கியர் செயலிழந்ததைத் தொடர்ந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், விமானத்தின் இறக்கைகள் ஓடுபாதை மேற்பரப்புடன் உரசுவதை காட்டுகிறது. இதன் விளைவாக எஞ்சின் பகுதி தீப்பற்றியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அதிஷ்டவசமாக பயணிகள் அல்லது பணியாளர்களிடையே எந்த உயிரிழப்பும், காயமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகம

    இந்த விபத்து நடப்பதற்கு சில சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவின் முவான் நகரில் உள்ள விமான நிலையத்தில் 181 பயணிகளுடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கிய பின் வெடித்தது. இந்த விபத்தில் 127 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. 

    • இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.
    • 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள்

    தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென் கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

    தலைநகர் சியோலின் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.

    பறவை ஒன்று விமானத்தில் இடித்ததே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகளிடம் இருந்து முதற்கட்ட தகவல் வந்துள்ளது. விபத்து தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இரண்டு கருப்புப் பெட்டிகளும் - விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்த விமானப் பணிப்பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கண்விழித்து, என்ன நடந்தது, நான் ஏன் இங்கு இருக்கிறேன் என மிரண்டுபோய் கெட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த விமானத்தின் இருக்கைகள் மற்றும் சாமான்களின் துண்டுகள் ஓடுபாதைக்கு அடுத்துள்ள மைதானத்தில் சிதறிக்கிடந்தன. எரிந்த வால் பகுதியும் அங்கு காணப்பட்டது.

    விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற 177 பேரும் கொரியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு ஜிஜூ ஏர் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.

    விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து, பறவை ஒன்று தாக்கும் எச்சரிக்கையை வழங்கப்பட்டுள்ளதும், விமானி "மே டே" [MAYDAY] அவசர அழைப்பை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இக்கட்டான நிலை ஏற்படும் போது விமானிகள் அனைவரையும் அலர்ட் செய்ய அறிவிக்கும் வார்த்தையே MAYDAY. 

    ×