search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத்பே"

    • 90 மணி நேரம் வேலை என்பது கடினமானது என்றார் பாரத்பே சிஇஓ.
    • உற்சாகமாய் வேலை செய்யும் ஊழியர்கள் தரம்வாய்ந்த முடிவுகளை கொடுப்பார்கள்.

    புதுடெல்லி:

    பிரபல தொழிலதிபரான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

    இவரது கருத்துக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்தக் கருத்து அவ்வப்போது விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், 90 மணி நேர வேலை குறித்து பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி நளின் நேகி கூறியதாவது:

    90 மணிநேரம் வேலை என்பது கடினமானது. என்னைக் கேட்டால் வேலையைப் பொறுத்தவரை அதன் தரமே முக்கியம்.

    பணி-வாழ்க்கைச் சமநிலை பற்றிய விவாதம் எப்போதும் இருந்து வருகிறது. புதிய நிறுவனங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் தொழில் பாதையை வளர்க்க முடியும்.

    பாரத்பே நிறுவனம் மக்களுக்கு ஒரு தொழில் நிறுவனமாக அறியப்பட வேண்டும். அதில்தான் எங்களது கவனம் உள்ளது. பணியிடத்தில் வேலை நேரத்தை அளவிடுவதற்கு பதிலாக, ஊழியர்களின் உற்பத்தித் திறன் மற்றும் முடிவுகளை அளவிடும்போது நல்ல பலன்களைக் காணலாம்.

    அதிக உற்பத்தி திறனோடு பணி செய்வோர், தரம்வாய்ந்த முடிவுகளைக் கொடுப்பார்கள். குறிப்பாக உற்சாகமாய் வேலை செய்யும் ஊழியர்கள் தரம்வாய்ந்த முடிவுகளை அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் பணியை நாம் பின்தொடர வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

    • "பே த்ரூ மொமைல்" என்பதன் சுருக்கமே பேடிஎம் (Paytm)
    • பேடிஎம் இல்லையென்றால் பாரத்பே தோன்றி இருக்காது என்றார் அஷ்னீர்

    கடந்த 2010ல், விஜய் சேகர் சர்மா என்பவர், தனது "ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்" நிறுவனத்தின் கீழ் தொடங்கிய பன்னாட்டு நிதி பரிமாற்ற தொழில்நுட்ப நிறுவனம் "பேடிஎம்" (Paytm). "பே த்ரூ மொபைல்" (Pay through mobile) என்பதன் சுருக்கமே பேடிஎம்.

    இந்தியாவில், கரன்சியை கையாளாமல் ஸ்மார்ட்போன் மற்றும் "க்யூஆர் கோட்" (QR Code) வழியாக நிதி பரிமாற்றம் செய்வதில் பேடிஎம் செயலி முன்னோடியாக கருதப்படுகிறது.

    கடந்த 2024 ஜனவரி 31 அன்று மத்திய ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நடவடிக்கைகளுக்கு 2024 பிப்ரவரி 29 தேதிக்கு மேல் சந்தையில் செயல்பட அனுமதியை ரத்து செய்துள்ளது.

    இப்பின்னணியில், "பாரத்பே" (BharatPe) எனும் மற்றொரு நிதி பரிமாற்ற செயலியை உருவாக்கிய நிறுவனரான அஷ்னீர் குரோவர் (Ashneer Grover) இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை. கடந்த 12 வருட காலங்களில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முறையாக வளர்ந்தன. அதன் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ள அனைவரும் போட்டி போட்டு கொண்டு முன்வந்தனர். யூனிகார்ன் எனப்படும் தனிநபர் முயற்சியில் 111 நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு உதவுகின்றன. உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு பெரும் பங்கை அவை தருகின்றன; பல்லாயிரம் வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளன. வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளையும் அவை ஈர்த்துள்ளன. ஆனால், ஒரு சட்ட ரீதியான பாதுகாப்பும் அவற்றிற்கு வழங்கப்படவில்லை. அவர்கள் பெரிதாக வளர்ந்ததும் எதிரியாக பார்க்கப்படுகின்றனர். பேடிஎம் உருவாகாமல் போயிருந்தால், பாரத்பே தோன்றியிருக்காது. பேடிஎம் மீதான நடவடிக்கை, ஸ்டார்ட்-அப் நிறுவன தளங்களுக்கு சோக செய்தி. உரிமத்தையே ரத்து செய்வது அதீத நடவடிக்கை. ஆர்பிஐ-யில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் 60-வயதுக்காரர்களாக உள்ளதால் தொழில்நுட்ப அறிவாற்றல் உள்ளவர்களை அவர்கள் நம்ப மறுக்கின்றனர்.

    இவ்வாறு அஷ்னீர் தெரிவித்தார்.

    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், வரலாற்றில் முதுநிலை பட்டம் பெற்ற 66-வயதுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×