search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா சட்டசபை"

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய்ஷா.

    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

    உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • மும்பையில் அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று மனோஜ் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
    • வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

    புதுடெல்லி:

    மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜாரங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று அவர் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவு சட்டசபையில் இன்று நிறைவேறியது.

    இதன்மூலம் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதல் இடஒதுக்கீடு பெற உள்ளனர்.

    ×