search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக சிக்சர்"

    • இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 308 ரன்களைக் குவித்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற தெற்கு டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தெற்கு டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷர்தாக் ரேய் 11 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி, பிரியன்ஷ் ஆர்யா இருவரும் சூறாவளியாக சுழன்று அடித்தனர்.

    ஆயுஷ் பதோனி அதிரடியாக ஆடி 55 பந்தில் 19 சிச்கர், 8 பவுண்டரி உள்பட 165 ரன்கள் குவித்தார். பிரியன்ஷ் ஆர்யா 55 பந்தில் 10 சிக்சர், 10 பவுண்டரி உள்பட 120 ரன்கள் குவித்தார். தெற்கு டெல்லி அணி பேட்டிங் மொத்தமாக 31 சிக்சர்கள் அடித்துள்ளது.

    பிரமாண்ட இலக்கை நோக்கி ஆடிய வடக்கு டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தெற்கு டெல்லி அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், 19 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார்.

    வங்கதேச டி20 லீக் தொடரில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 18 சிக்சர் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    • டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    ×