என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல் காசா மோதல்"
- காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெருசலேம்:
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.
- இஸ்ரேல், அமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் காசா மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
- காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்க 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், காசாவில் மார்ச் 4-ம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதில் நெருக்கமாக இருக்கிறோம் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னிடம் தெரிவித்தார். அடுத்த திங்கட்கிழமைக்குள் (மார்ச் 4-ம் தேதி) போர் நிறுத்தம் ஏற்படும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.
காசா:
பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை ராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்தார்.
பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்