என் மலர்
நீங்கள் தேடியது "நயாப் சிங் சைனி"
- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது.
- நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.
அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது. இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில், அரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- அரியானாவில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
- இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் நயாப் சிங் சைனி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
90 சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள அரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி மற்றும் மாநில பா.ஜ.க. தலைவரான மோகன் லால் பதோலி ஆகியோர் ஜிந்த் கிராமத்தில் இன்று மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்த பெண்மணியிடம் முதல் மந்திரி நயாப் சிங் சைனி கிராமத்தில் நடைபெறும் விவசாயம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.
முதல் மந்திரியின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலர்களும் மாட்டு வண்டியுடன் நடந்து சென்றனர்.
- மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும்.
- கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடித்துள்ள பா.ஜ.க. இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.
முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை அவர் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் கூறியதாவது:-
பா.ஜ.க.-வுக்கு சாதகமாக காற்று வீசுகிறது. அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும். கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனவு கண்டார்கள்.
அவர்களுடைய பணிகளை அவர்கள் உற்று நோக்க வேண்டும். அவைகள் வளர்ச்சிக்கு எவ்வாறு தடையாக இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தலித் மக்களை அவர்கள் இழிவுப்படுத்தியதை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு நயாப் சிங் சைனி தெரிவித்தார்.
- விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 தொகுதியில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
பாஜக வெற்றி பெற்றதை அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- அரியானா மாநில முதல்வர் பதவிக்கு பா.ஜ.க.வில் சண்டை நடைபெற்றது.
- தற்போது இந்த சண்டை எப்படியோ சமாளிக்கப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றது. ஏற்கனவே முதல்வராக இருக்கும் நயாப் சிங் சைனி 2-வது முறையாக இன்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் பா.ஜ.க.-வில் முதல்வர் பதவிக்கு சண்டை நடைபெற்று வருவதாகவும், சில தினங்களில் முதல்வர் மாற்றப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:-
தசரா நாளில் அரியானா மாநில முதல்வராக நயாப் சிங் சைனி பதவி ஏற்கும் விழா நடக்கிறது. முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பா.ஜ.க.வில் ஏராளமான சண்டைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சண்டை எப்படியோ சமாளிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு விழா நடந்துள்ளது. ஆனால், அரியானா முதல்வர் இன்னும் நில நாட்களில் மாற்றப்படுவார்.
இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பதவி ஏற்ற நயாப் சிங் சைனி, அரசு மீது நம்பிக்கை வைத்த அரியானா மாநில மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.
- டெல்லிக்கு குடிநீர் வழங்கும் யமுனை நதியில் விஷம் கலந்ததாக ஹரியானா மாநில அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
- யமுனை நீரை குடித்த ஹரியானா முதல்வர், விஷம் இல்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது எனத் தகவல்.
ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக பாயும் யமுனை நதியில் இருந்து டெல்லிக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. யமுனை நதி நீரை சுத்திகரித்து டெல்லி மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.
டெல்லி மக்களின் குடிநீ்ர் ஆதாரமாக விளங்கும் யமுனை நதி நீரில் விஷம் கலந்ததாக ஹரியானா மாநில அரசு மீது கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு பதில் அளித்திருந்தனர். இதற்கிடையே ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி யமுனை ஆற்றில் இறங்கி, ஓடிய இரண்டு கைகளால் நீரை எடுத்து குடித்தார். அப்போது நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் விஷம் (நச்சு) கலக்கப்படவில்லை என முடிவு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
நயாப் சிங் சைனி யமுனை நீரை குடிக்கும் வீடியோவை போஸ்ட் செய்த கெஜ்ரிவால் "தண்ணீரை குடிப்பதுபோல் நயாப் சிங் சைனி பாசாங்கு காட்டுகிறார். உண்மையிலேயே நீரை மீண்டும் ஆற்றில் துப்பினார். அவர்களால் குடிக்க முடியாத நச்சு கலந்த தண்ணீரை மக்கள் குடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இது நடக்க நான் விடமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு நயாப் சிங் சைனி "கெஜ்ரிவால் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லி வருகிறார்" என காட்டமாக பதில் கொடுத்துள்ளார்.
யமுனை நிதியில் இருந்து டெல்லி மக்களின் குடிநீருக்கு எடுக்கப்படும் நீரில் அமோனியாக அளவுக்கு அதிகமாக கலந்து இருப்பதாக டெல்லி மாநில முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியிருந்தார்.