என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்சிபி மகளிர் அணி"
- ஆண்கள் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
- அந்த மூன்று முறையும் சேசிங்கில் தோல்வியை தழுவியது.
புதுடெல்லி:
2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை வென்று முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் ஆடி வருகிறது.
இந்நிலையில் ஆர்சிபி-யின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இறுதிப்போட்டியில் 4-வது முறையாக சேசிங் செய்கிறது. ஆண்கள் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. அந்த மூன்று முறையும் சேசிங்கில் தோல்வியை தழுவியது.
ஆடவர் ஆர்சிபி அணி 2009 இறுதிபோட்டியில் டெக்கான் ஜார்ஜஸ் அணியுடனும் 2011 சிஎஸ்கே அணியுடனும் 2016 சன்ரைசர்ஸ் அணியுடனும் தோல்வியடைந்தது.
இந்த இறுதிபோட்டிக்கு தோல்விக்கு மகளிர் ஆர்சிபி அணி முற்றுப்புள்ளி வைக்குமா என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடந்த 4 போட்டிகளிலும் ஆர்சிபி அணி டெல்லியுடன் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி அணியில் ஷஃபாலி வர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- ஆர்சிபி அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
2-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷஃபாலி வர்மா- மெக் லானிங் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை டெல்லி அணி குவித்தது. இதனையடுத்து பிரேக் விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடிய டெல்லி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
8-வது ஓவரை வீசிய சோஃபி மோலினக்ஸ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 44, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 0, ஆலிஸ் கேப்ஸி 0 என ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்ததால் பொறுப்புடன் ஆடிய மெக் லானிங் 23 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த மரிசான் கேப் 8, ஜெஸ் ஜோனாசென் 3, மின்னு மணி 5, ராதா 12 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.
ஆர்சிபி அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்
- 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
- இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. முதலாவது ஆண்டில் மும்பை இந்தியன்சும், 2-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மகுடம் சூடின.
இந்த நிலையில் 3-வது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி வதோதராவில் உள்ள கோதம்பி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி பெற்றுள்ளன.
- குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
- ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
தொடக்க ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, நடப்பு சாம்பியனான மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூன் -லாரா வால்வார்ட் ஆகியோர் களமிறங்கினர். லாரா வால்வார்ட் 6 ரன்னிலும் அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து பெத் மூன் மற்றும் கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். பெத் மூன் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டியாண்ட்ரா டாட்டின் 25, சிம்ரன் ஷேக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தது. ஆர்சிபி தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ராகவி 22 ரன்னிலும் கனிகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
- குஜராத் தரப்பில் டியாண்ட்ரா டாட்டின், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே ஆர்சிபி-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மந்தனா 10, டேனியல் வயட்-ஹாட்ஜ் 4, எலிஸ் பெர்ரி 0 என வெளியேறினர். இதனையடுத்து ராகவி- கனிகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. ராகவி 22 ரன்னிலும் கனிகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
குஜராத் தரப்பில் டியாண்ட்ரா டாட்டின், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- பெங்களூரு அணி உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
- போட்டிகளைக் காண வந்த ரசிகர்கள் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
3-வது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
வதோதராவில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, அதன்பிறகு உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
இந்நிலையில், தொடர் தோல்வி எதிரொலியாக பெங்களூரு ரசிகர்களிடம் பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஸ்மிருதி மந்தனா கூறுகையில், இந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவு அளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது.
- அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களுரு பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜார்ஜியா வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. மேகனா 12 பந்தில் 27 ரன்னும், எல்லீஸ் பெரி 28 ரன்னும், ராக்வி பிஸ்ட் 14 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ரிச்சா கோஷ் ஆரம்பம் முதலே சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஸ்னே ரானா 6 பந்தில் 26 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், பெங்களூரு அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் உ.பி.வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது உ.பி.வாரியர்ஸ் பெற்ற 3வது வெற்றி ஆகும்.