search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பரப்புரை"

    • துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கைதானவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட டிரம்ப், வாக்காளர்களிடையே உரையாற்றினார்.

    டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டா ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி இருக்கிறது.

    துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும், சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது டிரம்ப், பேரணியில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    "கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற போதிலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்று எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி மனு.
    • டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது.

    மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டீப் பேஃக் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள ககென் முர்மு மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
    • 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்

    மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு, தேர்தல் பரப்புரையின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மால்டா தொகுதி எம்.பி.யாக உள்ள இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

    மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×