என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ பாஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    • ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    எத்தனை வாகனங்கள் வருகின்றன, எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பிறகே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர முடியும். இதனை ஆய்வு செய்வதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சுற்றுலா வாகனங்களை சோதித்தபிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கிறார்கள்.

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபு, செயலாளர் மகேந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ஊட்டியில் காட்டேஜ் மற்றும் லாட்ஜில் முன்பதிவு செய்தவர்கள் தற்போது அதனை ரத்து செய்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்கள் சுற்றுலாபய ணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள், ஓட்டல், காட்டேஜ் உரிமையாளர்கள் உள்பட அனைத்து வியாபாரிகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இ-பாஸ்சை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒரு நாள் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து கடையடைப்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வியாபாரிகளும் ஆதரவு அளித்தால் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்.
    • 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

    நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கின்றனர்.

    இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.

    இந்நிலையில், நீலகிரி செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 6 நாட்களில் 1,03,308 வாகனங்களுக்கு இ-பாஸ் ழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இன்று மட்டும் (இரவு 8 மணி வரை) 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

    • பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    ஊட்டி:

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகிறார்கள்.

    3-வது நாளான இன்று காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மலைரெயில், டிஸ்னி வேல்ட் உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். மலா் கண்காட்சியில் நடப்பு ஆண்டில் முதன்முறையாக இரவில் லேசா் லைட் ஷோ நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனா்.


    ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது.

    தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். அந்த வகையில் கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சிமுனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிக ளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    இ-பாஸ் நடைமுறையால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகன நிறுத்துமிடம், தங்குமிடம் போன்ற பிரச்சினைகள் இன்றி மகிழ்ச்சியாக வந்து செல்ல முடிந்ததாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனா்.

    • போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
    • இ பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

    கோடை காலம் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதையொட்டி, சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இதர சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.

    இதை கருத்தில் கொண்டு கோடை மற்றும் விடுமுறை காலக்கட்டமான மே மாதத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வெளியூர்களில் இருந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ பாஸ் பெறும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் செல்லும் உள்ளூர் மக்களும் ஒருமுறை இ பாஸ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் "epass.tnega.org" என்ற இணையதளத்தில் இபாஸ் பெறலாம். இ பாஸ் நடைமுறை மே 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
    • இ-பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனை தவிர்க்கும் நோக்கில் கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமல்படுத்தியதை போன்றே இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் கீழ் மே 7 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொடைக்கானல் வருவோர் இ பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.

    இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை

    உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம். ஆய்வு செய்துள்ளதாகவும், இ-பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
    • கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரியும் வெளியிடப்பட்டது. கொடைக்கானலில் வாரந்தோறும் சராசரியாக சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் வார இறுதி நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    இவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் செல்போன் மூலமே இ-பாஸ் பதிவிறக்கம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.

    ஆரம்பத்தில் இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருவதாக உள்ளூர் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்ட மே 7ந் தேதி முதல் அக்டோபர் 15 வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 62 வாகனங்களில் 14 லட்சத்து 98 ஆயிரத்து 206 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. மே 7ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரை 100 நாட்களில் 1 லட்சத்து 1523 வாகனங்களில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 818 பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

    நேற்று மட்டும் 6096 வாகனங்களில் 31,689 பயணிகள் கொடைக்கானல் செல்ல அனுமதி பெற்றிருந்த நிலையில் 98 வாகனங்களில் 705 பேர் மட்டுமே வருகை தந்தனர். வழக்கமாக சுதந்திரதினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில் தற்போது குறைந்த அளவே உள்ளனர்.

    • சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது.
    • விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.

    கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது. நகர கூட முடியாமல் நீண்ட நேரமாக சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

    விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    ×