என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்"

    • இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் பட்டோடி கோப்பை என அழைக்கப்படுகிறது.
    • இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போல இந்தியா-இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த முடிவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    இந்த முடிவு இந்தியா-இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்த்திறன் இல்லாததைக் காட்டுகிறது. சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும்.

    இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
    • இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பட்டோடி கோப்பையை 'ஓய்வு' செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தொடரிலிருந்து இது நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது.

    இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.

    • கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
    • உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகின்றன என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.

    இந்த நிலையில், ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இதையொட்டியே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிவிப்பு காரணமாக ஐ.பி.எல். அணிகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    • டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    இவருடன் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

     


    2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், க்ரிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் மார்க் வுட்

    உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 22 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜூன் 4 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • லாஸ் ஏஞ்சல்சில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடம்

    பிடித்து அசத்தியது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.

    இதையடுத்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 14-ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஆகியவை இணைந்து கிரேட் பிரிட்டனாக விளையாட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

    2026 மற்றும் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பைகள், விளையாட்டை வளர்ப்பதற்கும் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள அதிகமான மக்களை ஊக்குவிக்கவும் இது மற்றொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    லாஸ் ஏஞ்சல்சில் ஏற்கனவே 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது அங்கு 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 100 பந்துகளை மட்டுமே கொண்டு இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடருக்கு ஐபிஎல் போல மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதனால், ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், தற்போது ஒவ்வொரு அணிகளின் 49% பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனிடையே முதற்கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளது.

    ஹன்ட்ரட் அணிகளின் 49% பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51% பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.
    • 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில் இங்கிலாந்து அரசியல்வாதிகள் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

    • இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜுன் 20-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஜுன் 20-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது டெஸ்ட் பர்மிங்காம் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் லாட்ஸ் மைதானத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ×