என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ்"

    • நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    லக்னோ:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என நினைக்கக் கூடாது. அப்படி இருந்திருந்தால் அவர் அதை முன்பே செய்திருப்பார்.

    நாங்கள் தற்போது தோனியுடன் இணைந்து சரியான திசையில் செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அணியின் செயல்பாட்டை முன்னேற்ற முயற்சி செய்வோம்.

    கடந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. கொஞ்சம் கூட எதிரணிக்கு சவால் அளிக்காமல் நாங்கள் தோற்ற விதம் எனக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே எங்களுக்குள்ளேயே நாங்கள் சுயபரிசோதனை செய்து எப்படி முன்னேறலாம் என்பது குறித்து கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

    எங்கள் அணி தோல்வியின் மூலம் பல காயங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தக் காயத்தை எல்லாம் நாங்கள் உத்வேகமாக மாற்றி வெற்றியை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.

    வீரர்கள் தங்களது பார்மை கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நாம் அனைவரும் சிக்சர்களைப் பற்றியே பேசிக் கொள்கிறோம். ஆனால் அதுவே அனைத்தும் கிடையாது. சிக்சர் அடிப்பதற்கும், பெரிய ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பதற்கும் ரசிகர்கள் இடையே நிறைய ஆர்வம் இருப்பது எனக்கு தெரியும். இதை சில அணிகள் சிறப்பாக செய்கின்றது.

    எனினும் நாம் ஒன்றும் பேஸ் பால் போட்டியில் இல்லை சிக்சர், பவுண்டரி பற்றி பேச. பந்திற்கும், பேட்டிற்கும் இடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகே.

    லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் நிச்சயம் எங்களுக்கு அபாயத்தை கொடுப்பார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கின்றார். அவரை விரைவில் ஆட்டம் இழக்கவைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    • சிஎஸ்கே-கேகேஆர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 11-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

    • ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
    • தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

    இதில் எம்.எஸ்.தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதையடுத்து தோனி ஓய்வுபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தோனி ஓய்வுபெற வேண்டும் என நேரடியாக தெரிவித்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "

    இதுதொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என தெரிவித்தார்.

    ஹைடனின் இந்த விமர்சனம் தோனி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 182 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்களை மட்டுமே எடுத்தது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    சி.எஸ்.கே. சார்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் ஆடி 63 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார். எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ரன் சேர்த்தது. சூர்யகுமார் 29 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். இருவரையும் நூர் அகமது அவுட்டாக்கினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் தீபக் சஹர் 28 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

    சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐபிஎல் 2025 சீசனின் 3வது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • முதலில் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா டக் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்குகிறது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி வருகிறது.

    மும்பை அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    • கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார்.
    • டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 53-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தர்ம சாலாவில் நடக்கிறது.

    இதில் ருதுராஜ் கெய்க் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சாம்கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்சுக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை சி.எஸ்.கே. பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் துருப்பு சீட்டாக இருக்கிறார். மலிங்கா போன்று பந்து வீசும் அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 28 ரன் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றி யது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

    உலக கோப்பை விசா நடைமுறைக்காக நாடு திரும்பியதால் அவர் சென்னையில் கடந்த 1-ந் தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது அவர் அணியோடு இணைந்துள்ளார். இதனால் இன்று விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தை மாதிரி என்று பதிரனா தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது:-

    டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (டோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.

    வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன்.

    இவ்வாறு பதிரனா கூறினார்.

    பதிரனா கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டத்தில் 19 விக்கெட் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • முதல் நாள் ஏலத்தில் சிஎஸ்கே அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:

    ஜெட்டா:

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

    முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அந்த வீரர்களின் விவரம்:

    நூர் அகமது 10 கோடி

    ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடி

    டேவன் கான்வே 6.25 கோடி

    கலீல் அகமது 4.8 கோடி

    ரச்சின் ரவீந்திரா 4 கோடி

    ராகுல் திரிபாதி 3.4 கோடி

    விஜய் சங்கர் 1.2 கோடி

    ×