search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் அமைப்பு"

    • காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போர் காரணமாக காசாவில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. காசாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த போரை தற்காலிமாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தின. இதற்கு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஒத்துக் கொண்டன.

    இதையடுத்து காசாவில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள காசாசிட்டி, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    இதனால் மத்திய காசா பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


    முகாம்கள் நடக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றாலும் மற்ற பகுதிகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதலால் முகாம்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மஜித் அபு ரமதான் கூறும்போது, போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடத்த, தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

    • ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.
    • இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வரும் பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே பேச்சு வார்த்தை மூலம் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்தனர். இன்னும் ஹமாஸ் அமைப்பினரிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.

    இதற்கிடையே காசாவில் உள்ள ஹமாசின் சுரங்கப் பாதையில் பிணைக்கைதி கள் 6 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டது.

    இதையடுத்து இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. பிணைக் கைதிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிரதமர் நெதன்யாகு கூறும்போது, "6 பிணைக்கைதிகளையும் தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் திரும்பக் கொண்டு வராததற்காக உங்களிடம் (மக்கள்) மன்னிப்பு கேட்கிறேன். இதற்கு ஹமாஸ் பெரும் விலை கொடுக்க நேரிடும்" என்றார்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறும் போது, "பிணைக்கைதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு தொடர்ந்து வலியுறுத்தினால் பிணைக்கைதிகள் சவப்பெட்டிகளுக்குள் அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பி அனுப்பப்படுவார்கள்.

    இஸ்ரேல் ராணுவம் நெருங்கினால் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் போராளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கைதிகளின் பரிமாற்ற ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தடை செய்ததால் கைதிகளின் மரணத்திற்கு நெதன்யாகுவும், இஸ்ரேல் ராணுவமும்தான் முழு பொறுப்பு" என்றார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் - பலாஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்துள்ளது
    • போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது . இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

     

    பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் - இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது.

    காசாவில் 36,000 மக்களை கொன்று குவித்த பிறகு, தற்போது ரஃபாவில் உள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை.

     

    இந்நிலையில் பாலஸ்தீனிய சுதந்திர அரசும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் ஐ.நாவின் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தாயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்த இந்த இரக்கமற்ற போரை முடிவுக்கு கொண்டுவருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கிடையில் காசா தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 

    • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
    • ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

    ×