என் மலர்
நீங்கள் தேடியது "ஊட்டச்சத்துகள்"
- குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
- அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.
குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். உண்மையில், கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி-1, பி-2, பி-6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்தாக மாறி, உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.
உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சினைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளில் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரை பாதிப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.
மேலும், கண்புரை உருவாகுவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.
- வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
- நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்தவை, மிருதுவானவை, சத்தானவை. தினமும் ஊறவைத்த ஒரு வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை..
இதய ஆரோக்கியம்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும் உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
மூளை செயல்பாடு
மேலும் வால்நட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை செயல்பாட்டையும் மேம்படுத்தும். அறிவாற்றல் திறனையும் அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்பு
வால்நட்டில் பாலிபினால்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்டுகள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
உடல் எடை
வால்நட் அதிக கலோரிகள் கொண்டதாக இருந்தாலும் உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதனால் சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாக உட்கொள்ளப்படும் கலோரி அளவை குறைக்கவும் செய்யும்.
செரிமானம்
அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிடும்போது எளிதில் செரிமானமாகிவிடும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் அதிகரிக்கும். அதில் செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்தும் உள்ளது.
எலும்பு ஆரோக்கியம்
வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதற்கு மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் தேவை. அவை வால்நட்டில் இருக்கின்றன. அதனை தினமும் சாப்பிடுவது அதிக பலனை தரும்.
சரும ஆரோக்கியம்
அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஈ அதிகம் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன.
ரத்த சர்க்கரை
அக்ரூட் பருப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
தூக்கம்
மெலடோனின் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கும் தன்மை அக்ரூட் பருப்புக்கு உண்டு. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனாகும். இதனால் தூக்கத்தின் தரம் மற்றும் தூங்கும் கால அளவை மேம்படுத்த உதவும்.
நாள்பட்ட நோய்கள்
அக்ரூட் பருப்பில் பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன.
- கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
கர்ப்ப காலத்தில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க உங்கள் உடலுக்கு கூடுதலான கர்ப்ப காலத்தில் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவை.
மேலும், உங்கள் குழந்தைக்கு உணவளிக்க உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் பெறுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதம்
பாதாமில் கால்சியம், மெக்னீசியம், புரதம், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளது.
பாதாம் சாப்பிடுவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் எலும்புகளை வலுவாக்கும்.
இதய நோயில் இருந்து காப்பாற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
புற்றுநோயைத் தடுக்க உதவும்.
ஆற்றல் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

பிஸ்தா
பிஸ்தா மொறுமொறுப்பு சுவையான நட்ஸ் ஆகும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது.
பிஸ்தாவில் நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், தாமிரம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
பிஸ்தா சாப்பிடுவது உங்கள் உறுப்புகள், தசைகள் மற்றும் திசுக்கள் சரியாக செயல்பட உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்களின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

முந்திரி
கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் முந்திரியால் வழங்க முடியும். இதில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துகள் உள்ளது.
முந்திரி ஒட்டுமொத்த செரிமானத்திற்கு நல்லது மற்றும் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இது இரும்பின் சிறந்த மூலமாகும், ரத்த சோகையைத் தடுக்கவும் போராடவும் உதவுகிறது, மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
இது கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் நல்ல ஆதாரங்களாகும், எனவே அவை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.
முந்திரியை உட்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈறுகள் மற்றும் பல் சிதைவைத் தடுக்க உதவும்.
இது கொழுப்பு அளவுகளை பராமரிக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. முந்திரி வைட்டமின் கே இன் நல்ல மூலமாகும், இது கர்ப்ப காலத்தில் ரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.

வால்நெட்
அக்ரூட் பருப்புகள் பசியின்மை, இனிப்புகள் மற்றும் பல சுவையான உணவுகளுக்கு ஒரு சிறந்த மூலப்பொருள். வால்நெட் பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த உலர்ந்த பழங்கள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானது மற்றும் சத்தானது.
மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நல்ல தூக்கம் மற்றும் மனச்சோர்வு சரிசெய்ய உதவுகிறது.
சரியான எடை மேலாண்மைக்கு உதவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்உலர்ந்த அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கூடுதலாக, அத்திப்பழம் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றிற்கான உங்கள் தினசரி தேவைகளை கிட்டத்தட்ட உள்ளடக்கியது.
ஒரு நாளைக்கு ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தை ஜூசாக குடித்தால், கர்ப்பிணித் தாயின் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து 10% கிடைக்கிறது. உடலின் தாது தேவைகளை பூர்த்தி செய்கிறது.
ஆரோக்கியமான உணவுக்கு பங்களித்து செரிமானத்தை எளிதாக்குகிறது. ஒமேகா 3 மற்றும் ஃபோலிக் அமிலம் கருவின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. காலை சுகவீனத்தை குறைக்கிறது. இது இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும். உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

ஆப்ரிகாட்
ஆப்ரிகாட்டில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, தாமிரம், வைட்டமின் ஈ போன்ற சத்துகள் உள்ளது. மேலும் இதனை எடுத்துகொள்வதால் கர்ப்பகால மலச்சிக்கலைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தசை மற்றும் உறுப்பு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
பல பெண்கள் கர்ப்பகால நீரிழிவு நோயாலும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், ஆப்ரிகாட் பழங்களை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவுகிறது.
இதை சாப்பிடுவதால் தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் நன்மை பயக்கும். ஆப்ரிகாட் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த உலர்ந்த பழங்களில் ஒன்றாகும். ஒரு சுவையான மில்க் ஷேக் செய்ய உலர்ந்த அப்ரிகாட் பழங்களை துண்டாக்கி தானியங்கள், இனிப்புகள் மற்றும் பலவற்றை சேர்த்து பாலுடன் கலக்கவும். பின்பு அதனை எடுத்துகொள்ளலாம்.

பேரிட்சை
பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்சினை வருவதை தவிர்க்க தாய்மார்களுக்கு கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இது கருப்பையில் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
உங்கள் குழந்தைக்கு சுமூகமான பிறப்பை உறுதி செய்கிறது மற்றும் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
மக்னீசியம் நிறைந்தது, இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரும்புச்சத்து குறைபாட்டை நிர்வகிப்பதற்கும் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பேரிட்சம்பழம் நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது.
- மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீங்கும்.
- மனதுக்கும் உற்சாகத்தை தரும்.
தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
எல்-ஆர்ஜினின், எல்-கார்னிடைன், எல்.சிட்ருலின், எல்.டைரோசின் ஆகிய அமினோ அமிலங்கள், புரோமிலென் என்ற என்சைம், லைக்கோபீன், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பயன்தரும். அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள்:-

காய்கறிகள்:
தக்காளி, கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை

பழங்கள்:
நேந்திரன் வாழை, செவ்வாழை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.

விதைகள்:
பூசணி விதைகள், எள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கடற்பாசிகள். சாக்லேட்டுகள், கருப்பு திராட்சை

அசைவ உணவுகள்:
கோழி இறைச்சி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மத்திச்சாளை, சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால்

அரிசி:
சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி
மூலிகைகள்:
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.
சித்த மருந்துகளில் மதன காமேஸ்வர லேகியம், சாலாமிசிறி லேகியம் ஆகியவற்றை தலா 1-2 கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உற்சாகம் பெருகும். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.
- குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது.
- வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.
கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு பிரத்யேகமாக மல்டி வைட்டமின்கள் பரிந்துரைக்கப்படும். எனினும் இதை சுயமாக எடுத்துகொள்ளாமல் மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ள வேண்டும்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாயிடமிருந்து தான் பெறுகிறது. அதனால் வழக்கத்தை காட்டிலும் கர்ப்பகாலத்தில் அதிகமான ஊட்டச்சத்து தேவை.

ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம் என்பது வைட்டமின் பி ஆகும். இது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
கர்ப்பத்துக்கு முன்பு ஃபோலிக் அமிலத்தை எடுத்துகொள்வதால் கருவின் மூளை மற்றும் முதுகெலும்புகள் குறைபாடுகள் நரம்புகுழாய் குறைபாடுகள் போன்றவற்றை தடுக்க உதவும்.
இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு அன்னபிளவு, இதய குறைபாடுகள் பிறப்பு குறைபாடுகள் உண்டாகலாம்.

இரும்புச்சத்து
இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் என்னும் புரதத்தை உருவாக்க உதவுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்ஸிகனை எடுத்து செல்ல இது உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் வழக்கத்தை காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். கர்ப்பிணிக்கு அதிக ரத்த ஓட்டம் உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவை. அப்போதுதான் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் குறையில்லாமல் செல்லும்.

கால்சியம்
கர்ப்பகாலத்தில் கால்சியம் சத்தும் அவசியம். கால்சியம் குழந்தையின் எலும்புகள், பற்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்புகளை உருவாக்க உதவும். கால்சியத்தை உணவு வழியாகவே பெற்றுவிட முடியும். நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவை
பால், சீஸ், தயிர், புரக்கோலி, காலே என கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் குறைபாடில்லாமல் காக்கலாம்.
கர்ப்பிணிக்கு கால்சியம் குறைபாடு இருந்தால் குழந்தைக்கு கால்சியம் சத்து தேவைப்படும் போது தாயின் உடலில் உள்ள எலும்புகளிலிருந்து உறிஞ்சப்பட்டு குழந்தைக்கு கொடுக்கும்.

வைட்டமின் டி
உடலில் கால்சியம் உறிஞ்ச வேண்டுமென்றால் வைட்டமின்- D சத்து உடலுக்கு தேவை. வைட்டமின்-D உடலின் நரம்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணியை மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு சீராக இருந்தால் உடல் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். குழந்தைக்கு எலும்புகள், பற்கள் வளர வைட்டமின் டி தேவை.
- உண்ண வேண்டிய உலர் பழங்கள்.
- புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும்.
உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க விரும்புவார்கள். சுவையான, குறைவான கலோரி கொண்ட சிற்றுணவை தேர்வு செய்ய தடுமாறுகிறீர்களா?
பசியை போக்குவதுடன், உற்சாகமாக செயல்பட வைக்கும் உணவு வகைகளை விரும்புகிறீர்களா? ஆம்! எனில் உலர் பழங்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் உலர் பழங்களில் சோடியம், கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும்.
புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். அவை வழங்கும் நன்மைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்யும். உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பிஸ்தா
தொடர்ந்து உலர் பழங்கள் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களுக்கு பிஸ்தா சிறந்த தேர்வாக அமையும். இது பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். இதில் ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் பாலிபீனாலிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள்:
* நீரிழிவு நோயை தடுக்கும்.
* கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
* உடல் எடையைக் குறைக்க உதவும்.
28 கிராம் பிஸ்தாவில் புரதம் 5.72 கிராம், நார்ச்சத்து 3 கிராம், கார்போஹைட்ரேட் 7.7 கிராம், கொழுப்பு 12.85 கிராம், 159 கலோரிகள் உள்ளன.

முந்திரி
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, புரதம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைய உள்ளன. சிறுநீரக வடிவிலான இந்த உலர் பழம் உடல் எடையைக் குறைக்கவும், இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
28 கிராம் முந்திரி பருப்பில் புரதம் 5 கிராம், நார்ச்சத்து ஒரு கிராம், இரும்பு (தினசரி தேவையில் 11 சதவீதம்), தாமிரம் (தினசரி தேவையில் 67 சதவீதம்), கார்போஹைட்ரேட் 9 கிராம், கொழுப்பு 12 கிராம், 157 கலோரிகள் உள்ளன.

அத்தி
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அத்தி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க உதவும்.
100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் புரதம் 3.3 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், இரும்பு 2.03 மி.கி., மெக்னீசியம் 68 மி.கி., கால்சியம் 162 மி.கி., வைட்டமின் சி 1.2 மி.கி., 249 கலோரிகள் உள்ளடங்கி இருக்கின்றன.

பாதாம்
இது உலர் பழங்களிலேயே முதன்மையானது, பிரபலமானது. இதில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் ஏற்றது. இதனை அப்படியே பச்சையாகவோ, வறுத்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
* உடல் எடையை சீராக நிர்வகிக்க துணை புரியும்.
* சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
28 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம், 4 கிராம் நார்ச்சத்து, தினசரி வைட்டமின் ஈ தேவையில் 35 சதவீதம், தினசரி மெக்னீசியம் தேவையில் 20 சதவீதம், தினசரி கால்சியம் தேவையில் 8 சதவீதம் இருக்கிறது.

பேரீட்சை
உலர் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த உலர் பழம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்றது. உடல் எடையைக் குறைக்க உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடல் ஆற்றல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 7 கிராம் பேரீச்சம்பழத்தில் (ஒரு பழம்) புரதம் 0.2 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், சோடியம் 0.14 மி.கி, கார்போஹைட்ரேட் 5.3 கிராம், 20 கலோரிகள் உள்ளன.
ஒரு நாளைக்கு எத்தனை உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்?
உலர் பழங்களின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, தினமும் 4 முதல் 7 வரை சாப்பிடலாம். சரியான அளவில் உட்கொள்வது உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கும்.
எல்லா உலர் பழங்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?
ஏதேனும் ஒரு உலர் பழம் சாப்பிடுவதாக இருந்தால் 4 முதல் 7 வரை உட்கொள்ளலாம். அனைத்து உலர் பழங்களையும் சாப்பிடுவதாக இருந்தால் எல்லாவற்றிலும் ஒன்று, இரண்டு எடுத்துக்கொண்டு மொத்தம் ஒரு கைப்பிடி அளவுக்குள்ளாகவே (20 முதல் 30 கிராமுக்குள்) சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைப்பதற்கு எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை குறைப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த விரும்பினால், தினமும் பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்புகள், உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிக்க எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை அதிகரிக்க விரும்பினால், முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.
உலர் பழங்களை இரவில் சாப்பிடலாமா?
உலர் பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதிகாலையில் சாப்பிடுவதே சிறந்தது.