என் மலர்
நீங்கள் தேடியது "வங்க தேசம்"
- டி- 20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னதாக 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்துவருகிறது.
- வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.
இந்நிலையில் நேற்று (மே 23) சர்வதேச டி-20 தொடரின் 2 வது போட்டி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்கா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே, வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அமெரிக்காவை 144/6 என்ற ரன் கணக்கில் மட்டுப்படுத்தினர்.
ஆனாலும் 145 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் 138 ரன்கள் வரை மட்டுமே எடுத்தது. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவிடம் அந்த அணி தோற்றது. வெற்றியின் விளிம்பு வரை சென்றும் அதை எட்ட இயலாதது வங்கதேச அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்கு வங்கதேச அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை, எங்களின் பயிற்சி போதாது, பெரிய அணிகளுடன் மோதுவதற்கான வலு இன்னும் வங்கதேச அணிக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி, அமெரிக்க அணி உடனான தோல்விக்குப் பின் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரின் 3 வது மற்றும் கடைசி போட்டி நாளை (மே 26) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.
- சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.
ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் அமெரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3 ஆவது போட்டி ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் அடித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டி20 போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 11.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தன்சித் ஹசன் 58 ரன்களும் சவுமியா சர்க்கார் 43 ரன்களும் அடித்து அட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் அமெரிக்கா கைப்பற்றியது
- மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
- புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில், ரீமால் புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்க தேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச கடலோர மாவட்டங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பெரும் அபாய சமிக்ஞை எண். 10 ஒலிக்கப்பட்டுள்ளது. அங்கு மீன்பிடி படகுகள், இழுவை படகுகள் மற்றும் கப்பல்கள் மறு அறிவிப்பு வரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர் எம்.டி. மொஹிபுர் ரஹ்மான் சின்ஹுவாவிடம் கூறுகையில், "பத்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் இருந்து குறைந்தது 8,00,000 பேர் ஏற்கனவே தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றார்.
மேலும், அங்கு கனமழை எதிரொலியால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
- மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது
வங்கதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இந்து மத சாமியாரும் இஸ்கான் தலைவருமான சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் வங்கதேசத்தில் 2 இந்து மத சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாஸ்க்கு உணவு, மருத்துப்பொருட்கள் மற்றும் பணத்தை கொடுக்கச் சென்ற ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் ஆகிய இரு இஸ்கான் இளம் சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத வங்கதேச போலீஸ் வழக்குகள் சந்தேகத்தின் பேரில் கொத்வாலி காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதை எதிர்த்து போராட்டங்களும் நடந்து வருகிறது. சின்மோய் கிருஷ்ண தாஸ் உட்பட இஸ்கானுடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மத அடிப்படைவாத அமைப்பான இஸ்கானுக்கு தடை விதிக்க கோரி வங்கதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உலகளாவிய அமைப்புக்கு தடை விதிப்பது சடத்தியமில்லை என நீதிமன்றம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.