search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஞ்ச் ரோவர்"

    • தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ் பகிர்ந்துள்ளார்
    • உங்களை நீங்கள் நம்பினால், விரும்பியதை அடைய முடியும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.

    தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

    அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இவற்றின் விலை பெருமளவு குறையும்.
    • வினியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர கார் உற்பத்தி பிரிவாக ஜாகுவார் லேண்ட் ரோவர் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விலை உயர்ந்த ஆடம்பர கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பில் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களை அசெம்பில் செய்யும் போது, இவற்றின் விலை பெருமளவு குறையும்.

    மேலும், பிரிட்டனின் சொலிஹல் ஆலையை தவிர்த்து வேறொரு பகுதியில் ரேஞ்ச் ரோவர் கார்கள் அசெம்பில் செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். புதிய முன்னெடுப்பின் மூலம், ரேஞ்ச் ரோவர் கார்களின் விலை கிட்டத்தட்ட ரூ. 56 லட்சம் வரை குறையும் வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. மேலும், இவற்றை டெலிவரி எடுக்க காத்திருக்கும் காலமும் பெருமளவு சரிந்துவிடும்.

     


    உள்நாட்டில் அசெம்பில் செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி வேரியண்டில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், HSE வேரியண்டில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் எஞ்சின் 394 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. டீசல் எஞ்சின் 346 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல் டைனமிக் SE வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான வினியோகம் ஏற்கனவே துவங்கிவிட்டன.

    விலை விவரங்கள்:

    ரேஞ்ச் ரோவர் ரூ. 2 கோடியே 36 லட்சம்

    ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ரூ. 1 கோடியே 40 லட்சம்

    ரேஞ்ச் ரோவர் வெலர் ரூ. 87 லட்சத்து 90 ஆயிரம்

    ரேஞ்ச் ரோவர் இவோக் ரூ. 67 லட்சத்து 90 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    ×