search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் முடிவு"

    • மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
    • இன்று மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.

    அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். எனவே அதிபராக பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்த திசநாயகா, இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.

    இதனையடுத்து, இலங்கை பாராளுமன்றத்துக்கு நவம்பர் 14-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இத்தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுனா, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் உள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.

    பெரும்பான்மைக்கு 113 இடங்களும், சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால் அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சிறப்பு பெரும்பான்மையை பெற முனைப்புடன் உள்ளது.

    இந்த நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி தொடங்கியது. வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 70 லட்சம் பேருக்காக நாடு முழுவதும் 13 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளில் சுமார் 90,000 போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மக்கள் அதிகாலை முதலே வாக்குச் சவாடிகளில் நீண்ட வரிசையில் காத்திருத்து ஆர்வமுடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    அதேபோல் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிபர் திசநாயகா, இடைக்கால பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆகிய இருவரும் தலைநகர் கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர்.

    மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இதில், பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி பிடிக்கும் என்றே தெரிகிறது. தபால் வாக்குகளில் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேசிய மக்கள் சக்தி. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தற்போது வரை 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

    இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகள் மற்றும் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளை மட்டுமே தற்போதைய நிலையில் பெற்றுள்ளது.

    இன்று மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டன.
    • பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற முடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.

    நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.

    இதனிடையே பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்து கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற முடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.

    தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு தவறாகியுள்ளது.

    இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என கூறியுள்ளார்.

    • 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
    • ஏற்கனவே வரும் 8ம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து நரேந்திர மோடியின் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், டெல்லியில் நரேந்திர மோடி வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார்.

    ஏற்கனவே வரும் 8ம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதவி ஏற்பு விழா 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை இழக்கும் நிலையில் உள்ளது.
    • பா.ஜனாதா கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை இழுக்க இந்தியா கூட்டணி முடிவு.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கூறிய நிலையில், கருத்துக் கணிப்பை மீறி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

    பாஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடையும்போது சுமார் 240 இடங்களை தாண்டினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படும். இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி (272) கிடைக்கவில்லை.

    பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (14) ஆகியோரிடம் 30 இடங்கள் உள்ளது. இந்த 30 இடங்களை பாஜகவிடம் இருந்து இழுத்துவிட்டால் பாஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

    இந்த கணக்கை மனதில் வைத்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடித்துள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

    • பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
    • மாநிலங்களுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

    இந்நிலையில், இன்று அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில், அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 44 தொகுதிகளில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    ஆனால், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. இதில், பாஜகவும், காங்கிரசும் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நன்றி அருணாச்சல பிரதேசம்! இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள், அரசியல் வளர்ச்சிக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

    பாஜக மீது மீண்டும் நம்பிக்கை வைத்த தங்களுக்கு எனது நன்றிகள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்.

    தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் விதிவிலக்கான பாஜக நிர்வாகிகளின் கடின உழைப்பை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் இணைந்த விதம் பாராட்டுக்குரியது.

    2024ம் ஆண்டு சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்களில் அவர்களின் வெற்றிக்காக எஸ்கேஎம் மற்றும் முதலமைச்சர் தமாங்கோலேக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் சிக்கிமின் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.

    சிக்கிம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். சிக்கிமின் வளர்ச்சி மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் எங்கள் கட்சி எப்போதும் முன்னணியில் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×