என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான சாகச நிகழ்ச்சி"

    • ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.
    • விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர்.

    தென் ஆப்பிரிக்காவின் சால்தானா பகுதியில் விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனுபவம் மிக்க, திறமையான விமானிகள் விமானங்களில் அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை காண வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.

    அந்த வகையில், விமான சாகச நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் கானெல் என்ற விமானி இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயர பறந்து விமானத்தை சுழற்றினார். அப்போது நிலை தடுமாறிய விமானம் வேகவேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. இதை கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மீட்பு படையினர் விபத்துக் களத்திற்கு விரைந்து சென்றனர். பிறகு, விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர். எனினும், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.



    • அசாத்திய சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    போர்ச்சுகல் நாட்டின் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்று அசாத்திய சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தன.

    நடுவானில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இரு சிறிய ரக விமானங்கள் மோதிக் கொண்டதால் விமான சாகச நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விமானி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பினார். இது குறித்து விமான படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெஜா விமான சாகச நிகழ்ச்சியில் இரு விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறியதை விமான படை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.
    • விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சென்னை:

    இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற விமான சாகச ஒத்திகையின் போது மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அதே போன்று வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    அன்றைய தினம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ந்தேதி தடை விதிக்கப்பட உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மெரினா காமராஜர் சாலையில் அன்று காலையில் இருந்தே போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை மட்டும் அனுமதிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.

    புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல அன்றைய தினம் மெரினாவில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இன்று 2-வது நாளாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    வருகிற 4-ந்தேதி கடைசி நாள் ஒத்திகை நடத்தப்படுகிறது. இதன் பின்னர் சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.

    • கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.

    இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வருகிற 06 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்கள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு 120 பேருந்துகள் இயக்கப்படும். எனினும், வருகிற ஞாயிற்றுக் கிழமை விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஒட்டி, பொது மக்கள் வசதிக்காக 75 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோன்று அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளது. அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.

    இதுதவிர, டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம். தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதுதவிர சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் வருகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் மெரினா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண நேரில் செல்ல முடியாதவர்கள் அவரவர் இருந்த இடத்தில் நேரலையில், விமான சாகச நிகழ்சிசைய காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி மக்கள் இந்திய வான்படையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் விமான சாகச நிகழ்ச்சியை நேரலையில் கண்டுகளிக்க முடியும். இதுதவிர தூர்தர்ஷன் நேஷனல் மற்றும் தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சிகளிலும் நேரலை செய்யப்படுகிறது.

    மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதுதவிர சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் வருகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர், 1500 ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் மெரினா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண புறநகர் ரெயில்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக புறநகர் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதுவிர சென்னை மெட்ரோ ரெயில்களிலும் ஏராளமானோர் விமான சாகச நிகழ்ச்சியை காண செல்கின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் வழக்கத்திற்கு மாறாக கால தாமதமாக இயங்குகின்றன.

    முன்னதாக, வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது. இதேபோல் கூடுதல் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர், 1500 ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • 2003-ல் உருவாக்கப்பட்ட சாரங் குழு உலகிலேயே ஒரே ராணுவ சாகச ஹெலிகாப்டர் குழுவாக வளம் வருகிறது.
    • இந்திய விமானப்படையின் புதிய பயிற்சி விமானம் 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

    சென்னை:

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

    இதில் பங்கேற்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானப்படை குழுவினர் விவரம்:

    1. ஆகாஷ் கங்கா குழு (Akash Ganga Team)

    இந்தியாவின் முதன்மை ராணுவ பாராசூட் காட்சிக் குழு. 200 கிமீ வேகத்தில் இருந்து பாராசூட் மூலமாக நிலப் பகுதியை அடையும் நிகழ்வு.

    2. சூர்ய கிரண் விமானக் குழு (Surya Kiran Aerobatic Team - SKAT)

    இந்திய விமானப்படையின் சாகச காட்சிக் குழு. ஹாக் Mk 132 விமானத்தை கொண்டு சாகசத்தை நிகழ்த்துகிறது. சிறந்த வானியல் சாகசங்களின் அடையாளமாக விளங்குகிறது.

    3. சராங் குழு (Sarang Helicopter Display Team)

    2003-ல் உருவாக்கப்பட்ட சாரங் குழு உலகிலேயே ஒரே ராணுவ சாகச ஹெலிகாப்டர் குழுவாக வளம் வருகிறது. ஹால்த் த்ருவ் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரமாண்ட சாகச நிகழ்வை நிகழ்த்த உள்ளனர்.

    4. LCH (Light Combat Helicopter)

    பல குறிக்கோள்களுக்காக உருவாக்கப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர். ஒரு பைலட் மற்றும் ஒரு கோ பைலட் இயக்குவார்கள்.

    5. தேஜஸ் (Tejas)

    இந்தியாவின் 4.5 தலைமுறை டெல்டா விங், சிறிய மற்றும் மிக எளிய ரக போர் விமானம். தேஜஸ் விமானம் எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    6. சேதக் (Chetak)

    இலகு ரக பயன்பாட்டு ஹெலிகாப்டர். பிரான்சிய விமான நிறுவனமான சுட் ஏவியேஷனின் தயாரிப்பு இது.

    7. HTT-40

    இந்துஸ்தான் ஈரோனாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து உருவாக்கியது. இந்திய விமானப்படை எதிர்காலத்தின் திறனுக்கு சான்று. வீரர்களுக்கு மேம்பட்ட பயிற்சியை வழங்குகிறது.



    8. ரஃபேல் (Rafale)

    அதிக சுறுசுறுப்பு கொண்ட போர்விமானம். மிகவும் குறைவான வாய்ப்பிலேயே ராடாரில் தென்படும் தன்மை கொண்டது. பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    9. டகோட்டா (Dakota)

    இந்திய விமானப்படையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமானம். காஷ்மீர், 1947 போரில் மற்றும் 1971 பங்களாதேஷ் போரில் முக்கிய பங்கு வகித்தது.

    10. பிலாட்டஸ் PC-7 (Pilatus PC-7 MK II)

    இந்திய விமானப்படையின் புதிய பயிற்சி விமானம் 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

    11. ஹார்வர்ட் (Harvard)

    இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பயிற்சியாளர் விமானம். இந்தியாவின் வரலாற்றில் சிறப்பு பங்கு வகிக்கிறது.

    12. C-295

    இந்திய விமானப்படையின் புதிய போக்குவரத்து விமானம். 10 டன்கள் சரக்கு ஏற்றும் சக்தி கொண்டது.

    13. டோர்னியர் 228 (Dornier 228)

    இரட்டை எஞ்சின் கொண்ட போர்த் திறன் கொண்ட விமானம். பல நோக்கங்களுக்காக கடல் ரோந்துப் பயன்பாட்டுக்கானது.

    14. AEW&C

    வான்பரப்பில் முன்னோக்கி செல்லும் மற்றும் கட்டுப்பாட்டுத் தகவல், அபாய சிக்னல்களை முன்கூட்டியே தரும் சக்தி கொண்டது.

    15. மிக்-29 (Mig-29)

    இரட்டை எஞ்சின் போர் விமானம், பல்வேறு பரிமாணங்களில் செயல்களைச் செய்யக்கூடியது.

    16. IL-78

    நான்கு எஞ்சின்கள் கொண்ட டேங்கர், 500-600 லிட்டர்கள் வேகத்தில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டது.

    17. மிராஜ் (Mirage 2000)

    4-ம் தலைமுறையின் போர் விமானம். நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட விமானம்.

    18. P8i

    இந்தியக் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானம், நீண்டகால புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக.

    19. ஜாகுவார் (Jaguar)

    மாசு கொண்ட குண்டுகள் மற்றும் முற்றிலும் துல்லியமான ஆயுதங்களை எறியக்கூடிய விமானம். எதிரி நாடுகளை தகர்க்க முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட.

    20. சுகோய் 30 MKI (Sukhoi 30 MKI)

    எல்லா வானிலை சூழ்நிலைகளிலும் செயல்படக் கூடிய பல நோக்கங்களைச் செயல்படுத்தக் கூடிய போர் விமானம்.

    • காலை 10 மணியளவில் மெரினா கடற்கரை மணற் பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன.
    • வண்ண புகைகளை கக்கிய படியே மிக அருகாமையில் வட்டமிட்டபடியே பறந்து சென்றன.

    சென்னை:

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

    இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி என்பதால் அதனை கண்டு ரசிக்க பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது.

    விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மெரினா கடற்கரைக்கு இன்று காலை 7 மணியில் இருந்தே பொதுமக்கள் வர தொடங்கினார்கள். கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர்.

    மெரினா கடற்கரை சாலை பகுதி மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அமதிக்கப்படவில்லை. இதனால் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு மக்கள் நடந்தே சென்றனர்.

    காலை 10 மணியளவில் மெரினா கடற்கரை மணற் பரப்பு முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. 11 மணிக்கு சாகச நிகழ்ச்சி தொடங்கியதும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை கண்டு ரசித்தார்கள்.

    சிறுவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருமே விமான சாகச நிகழ்ச்சியை கைதட்டி ரசித்து மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள். விமானங்கள் தொடர்ச்சி

    க சாகசத்தில் ஈடுபட்டதை மெய்சிலிர்த்த படியே கண்டு ரசித்தனர். தங்களது செல்போன்களில் சாகச காட்சிகளை வீடியோக்களாகவும் படம் பிடித்தனர்.

    இன்று காலையில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்த நிலையில் சாகச நிகழ்ச்சி தொடங்கிய போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள மிகுந்த உற்சாகத்தோடு சாகச நிகழ்ச்சிகளை பிரமித்து பார்த்தார்கள்.




    இதன் காரணமாக மெரினா கடற்கரை பகுதி காணும் பொங்கல் தினத்தன்று காணப்படுவது போல களை கட்டி கோலாகலமாக காட்சியளித்தது. விமான சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்கியும், பாராசூட் மூலம் கீழே குதித்தும் சாகசத்தில் ஈடுபட்டனர்.

    அதனை கடற்கரை மணற் பரப்பில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மிரட்சியோடு கண்டு ரசித்ததை காண முடிந்தது.

    சாகசத்தில் ஈடுபட்ட விமானங்கள் 4 திசைகளிலும் பயங்கர சத்தத்தோடு சீறிப் பாய்ந்தன. அப்போது வண்ண புகைகளை கக்கிய படியே மிக அருகாமையில் வட்டமிட்டபடியே பறந்து சென்றன. இது கூடியிருந்த பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்திருந்தது.

    மெரினா கடற்கரையில் மட்டும் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை விமான சாகசத்தை இன்று கண்டு களிக்கின்றனர்.



    மெரினாவில் நடைபெறும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை கோவளம் முதல் மெரினா வரை உள்ள கடற்கரை பகுதி முழுவதும் கண்டு களிக்கலாம் என விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இதன்படி கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் மயிலாப்பூர், சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதுமே இன்று தங்கள் வீட்டு மாடிகளில் நின்றபடி பொதுமக்கள் விமான சாகசத்தை கண்டு ரசித்தனர்.

    இதன் மூலம் 15 லட்சம் பேர் வரை இன்றைய விமான சாகசத்தை கண்டு ரசித்ததாக விமானப் படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சாகச நிகழ்ச்சி விமான சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

    • 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர்.
    • அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.

    சென்னை:

    மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தை பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்த போது பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • வெயில் அதிகமாக இருந்ததால் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர்.
    • பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

    சென்னை:

    விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தார்.

    அங்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் பந்தலில் மு.க.ஸ்டாலின், மனைவியுடன் விமான சாகசங்களை பார்த்தார். வெயில் அதிகமாக இருந்ததால் மு.க.ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர். அவர்கள் கைதட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை ஏர்மார் ஷல் ஏ.பி.சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான சாகசத்தை கண்டு களித்தனர்.

    விமான சாகசத்தை பார்ப்பதற்காக மெரினாவில் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து சாகச நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்.
    • மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்.

    மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் தினத்தில்தான் மக்கள் அதிக அளவில் வருவார்கள். அப்போது மாலை நேரத்தில் வெயில் ஓய்ந்த பிறகே மக்கள் கூட்டம் காணப்படும்.

    ஆனால் இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மிஞ்சும் அளவுக்கு பொதுமக்கள் வயது வித்தியாசம் இன்றி கடறகரை முழுவதும் திரண்டிருந்ததை காண முடிந்தது.


    இதனால் கடற்கரை மணற்பரப்பே தெரியாத அளவுக்கு மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குழந்தைகளை தவற விட்டு தவித்த பரிதாபம்

    மெரினா கடற்கரையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக குடும்பத்தோடு பலரும் வந்திருந்தனர். இவர்களில் பலர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் தேடி அலைந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    ×