search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நமீபியா"

    • எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான்.
    • 39 வயதான அவர் இதுவரை 15 ஒருநாள், 54 டி20 போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது. நமிபியா அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வந்த டேவிட் வைஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 

    எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான். ஆனால் எனது கடைசி ஆட்டத்தை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதுவும் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடியதுடன் நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம்.

    இவ்வாறு டேவிட் வைஸ் குறிப்பிட்டார்.

    39 வயதான டேவிட் வைஸ் இதுவரை 15 ஒரு நாள், 54 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் வைஸ் முதலில் தங்களது சொந்த நாட்டு அணிக்காக ஆடினார். 2016-ம் ஆண்டில் நமிபியாவுக்கு இடம் பெயர்ந்த அவர் 2021-ம் ஆண்டில் இருந்து நமிபியா அணிக்காக விளையாடி வந்தது நினைவு கூரத்தக்கது.

    • மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
    • போட்டியின் பாதியில் மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டிரினிடாட்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து -நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் போட்டியில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், சிறிது நேரத்தில் மழை நின்றது. தொடர்ந்து மைதானத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

    மழை காரணமாக ஆட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 10 ஓவர்களாக மீண்டும் குறைக்கப்பட்டது.

    தொடக்கம் முதலே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ (31), ஹாரி புரூக் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சில சிக்சர்களாலும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் ட்ரம்பல்மன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமீபிய அணி பேட்டிங் செய்தது.

    ஆனால் இங்கிலாந்து அணியினரின் அபார பந்துவீச்சால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நமீபிய பேட்ஸ்மேன்கள் திணறினர். இறுதியில் நமீபிய அணியால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

    இன்று நடைபெறவிருக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

    டிரினிடாட்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டிகள் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.
    • சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த நமீபியா அணி 72 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நமீபியா வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் கேப்டன் கெர்ஹார்டு எர்சாமஸ் மட்டும் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டொயினிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    73 எனும் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 8 பந்துகளில் 20 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்களை அடித்தார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 74 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நமீபியா சார்பில் டேவிட் வெய்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

    • முதலில் ஆடிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது. ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர். மைக்கேல் லீஸ்க் 35 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    35 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது.
    • 2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

    பிரிட்ஜ்டவுன்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய நமீபியா அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.

    டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நமீபியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 ரன்கள் எடுத்ததே சூப்பர் ஓவரில் அதிக ரன் ஆகும். இதனை நமீபியா முறியடித்துள்ளது.

    2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஒரு போட்டியில் இலங்கை -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 13 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    2-வது சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:-

    1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) - இலங்கை 174/6 (20 ஓவர்கள்) - இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 - 7/1 - கண்டி, 2012

    2. மேற்கிந்திய தீவுகள் 139 (19.3 ஓவர்கள்) - நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) - மேற்கிந்திய தீவுகள் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 - 17/0 - கண்டி, 2012

    3. ஓமன் 109 (20 ஓவர்கள்) - நமீபியா 109/7 (20 ஓவர்கள்) - நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 - 10/1 - பார்படாஸ், 2024

    ×