search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி சட்டசபை தேர்தல்"

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே.
    • வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது:

    பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும்.

    சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    ஆட்சியில் உள்ள அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குப்போக்கு கூறிவருகிறது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.
    • டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    இதற்கிடையே, தலைநகர் தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி கட்சித் தலைவர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டோம். வரும் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடாது. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை தனியாகச் சந்திப்போம் என தெரிவித்தார்.

    ×