என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராய்ச்சியாளர்கள்"

    • கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன.

    கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் 1981 இல் முதன்முறையாக கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸில் இப்போதுதான் முதன்முறையாக கடண்டுபிடிக்கப்படுள்ளது.

    பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20- 200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன. இவை மனிதக் கண்களால் மட்டும் இன்றி சிறிய வகை மைக்ரோஸ்கோப்பினாலும் பார்த்தறிய முடியாதவை ஆகும்

     

    இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க மறைமுகமான ஆயுதங்களாக செயல்படுகிறதாம். பனியின் மேற்பரப்பில் இருந்தும், துளைகளில் இருந்தும் இந்த வைரஸ்களின் டிஎன்ஏ க்கள் சேகரிக்கப்பட்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செயப்பட்டு வருகிறது.

     

     

    மைக்ரோ பையோம் உயிரியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த ராட்சத வைரஸ்கள் பனியை சேதப்படுத்தும் ஆல்கே - களை அழித்து பனிக்கடி உருகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் எந்த அளவுக்கு வீரியத்துடன் செய்யப்படும் என்பதில் சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலமே அதைத் தெளிவுபடுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

     

    காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் பணிக்கட்டிகள் வேகமாக உருகி வரும் நிலையில் இந்த ராட்சத வைரஸ்கள் அதற்கு தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது.
    • இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.

    சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    வடமேற்கு சவூதி அரேபியாவில் பழமையான கோட்டை நகரத்தின் எச்சங்கள், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குய்லூம் சார்லக்ஸ் மற்றும் அவரது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 14.5 கிலோமீட்டருக்கு சுவர் இருந்தது.

    அல்-நதாஹ் என்று அழைக்கப்படும் இடம், வறண்ட பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான பகுதியில் நீண்ட காலமாக மறைந்து இருந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், "இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது. இந்நகரத்தில் 500 பேர் வரை வாழ்ந்திருக்கலாம். இந்த முக்கியமான கண்டுபிடிப்பு பண்டைய மக்கள் நாடோடிகளிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு எவ்வாறு மாறியது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    இது பிராந்தியத்தின் வரலாற்று நிலப்பரப்பில் அதன் முக்கியத்துவத்தை வெளிகாட்டுகிறது. அக்கால சமூக மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சிகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அரேபிய தீபகற்பத்தின் இந்த பகுதியில் நகரமயமாக்கலை நோக்கிய முக்கிய மாற்றத்தை வலியுறுத்துகிறது. குடியிருப்புகள் ஒரு நிலையான திட்டத்தைப் பின்பற்றி கட்டப்பட்டன மற்றும் சிறிய தெருக்களால் இணைக்கப்பட்டன.

    வெண்கல யுகத்தில் வடமேற்கு அரேபியாவில் பெரும்பாலும் ஆயர் நாடோடி குழுக்கள் ஆதிக்கம் செலுத்தினர். நீண்ட தூர வர்த்தகத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய கோட்டைகளை மையமாகக் கொண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நினைவுச் சின்ன சுவர் அங்கு உள்ளன" என்று தெரிவித்தனர்.

    • மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
    • சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன

    உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், மனிதர்களுடைய மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது

    நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ரீஜண்ட்ஸ் பேராசிரியரும் மருந்து அறிவியல் பேராசிரியருமான மாத்யூ காம்பன், "குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவது 50% அதிகரித்துள்ளது. சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன. இது ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனில் எடைக்கு சமம் என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விட மூளையில் 7 முதல் 30 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகவும் சராசரியாக 45 அல்லது 50 வயதுடைய சாதாரண நபர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4,800 மைக்ரோகிராம்கள் மைக்ரோபிளாஸ்டிக் இருந்தது என்றும் டிமென்சியா எனும் மராத்தி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இதை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் இருந்ததாக" அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    ×