search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பப்பு யாதவ்"

    • எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    மராட்டிய மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியை சேர்ந்த எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பப்பு யாதவின் செல்போனுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதில் பேசிய ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எதிராக இதுபோன்று பேசுவதை தவிர்க்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி இருந்தார்.

    அதன் பிறகு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பப்பு யாதவ் எம்.பி.க்கு மீண்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.யின் தனிப்பட்ட செயலாளர் முகமது சாதிக் ஆலமுக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில், பப்பு யாதவை கொலை செய்ய 6 நபர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்களவை எம்.பி. பப்பு யாதவ் 24 மணிநேரதத்தில் பிஷ்னோய் கும்பலை அளித்துவிடுவேன் என்றார்.
    • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

    மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அஜித் பவார் சிவ சேனா தலைவரைக் கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய துடித்து வருகிறது. இதனால் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பீகார் பூர்ணியா தொகுதி மக்களவை எம்.பி. பப்பு யாதவ், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் தான் அழித்து விடுவேன் என்றும் பேசினார். இதனால் அவருக்கும் அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

    எனவே தனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு வேண்டும் என்று பப்பு யாதவ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

    அதில், எனது உயிருக்கு அச்சுறுத்துதல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் வந்த பிறகும் பீகார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் செயலிழந்துள்ளது. இப்போது எனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ள்ளார்.

    • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
    • பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

    இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.

    இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில், சட்டம் அனுமதித்தால், லாரன்ஸ் பிஷ்னோயின் ஒட்டுமொத்த கும்பலையும் 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன் என்று பீகார் எம்பி பப்பு யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பப்பு யாதவ், "சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (லாரன்ஸ் பிஷ்னோய்) அரசாங்கத்திற்கு சவால் விடுகிறான். மக்களைக் கொன்று கொண்டிருக்கிறான், எல்லோரும் அமைதியாக இதை பார்த்து கொண்டிருக்கிறோம்.

    பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மற்றும் கர்னி சேனா தலைவரின் கொலையில் பிஷ்னோய் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தற்போது பாபா சித்திக் கொலை வழக்கில் அவன் சம்பந்தப்பட்டுள்ளான்" என்று தெரிவித்துள்ளார்.

    • மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • எம்.பி.யாக தேர்வானவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்து வருகிறார்.

    புதுடெல்லி:

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார். பிரதமர் மோடி உள்பட 279 பேர் நேற்று எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

    இன்று 2-வது நாளாக பதவிப்பிரமாணம் நடைபெற்று வருகிறது. தமிழக எம்.பி.க்கள் இன்று மதியம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக வெற்றி பெற்ற ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் இன்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர், ரீ-நீட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை அணிந்திருந்தார்.

    சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரின் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பப்பு யாதவ் வென்றார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை இன்று அவர் சந்தித்தார்.

    பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 100 லிருந்து 101 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏற்கனவே மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×