என் மலர்
நீங்கள் தேடியது "முதல்-மந்திரி தேர்வு"
- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
- பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார்.
புவனேஸ்வர்:
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியமைத்து இருந்த பிஜூ ஜனதாதளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
அதேநேரம் பா.ஜனதா கட்சி, சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 147 சட்டசபை இடங்களில் 78 தொகுதிகளிலும், 21 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களையும் கைப்பற்றியது.
தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து, ஒடிசாவிலும் புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளை அந்த கட்சி முடுக்கி விட்டு உள்ளது.
அதன்படி மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்வதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் சட்டசபை கட்சித்தலைவரை (முதல்-மந்திரி) பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்கிறார்கள். சுரேஷ் பூஜாரி எம்.எல்.ஏ, மாநில பா.ஜனதா தலைவர் மன்மோகன் சமல், கே.வி.சிங், மோகன் மஜி ஆகியோரின் பெயர்கள் புதிய முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன.
ஒடிசாவின் புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுவதை தொடர்ந்து, புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
முன்னதாக ஜெயதேவ் விகாரில் இருந்து பதவியேற்பு விழா நடைபெறும் மைதானம் வரை பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார். அப்போது அவர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு.
- கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அப்போது புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 26, 27-ந்தேதிகளில் நடை பெறும் சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிஷி பேசுவார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும்.
இதுவரை பதவியேற்பு விழா குறித்து உறுதியான தேதி முடிவாகவில்லை என்றனர்.
இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரசேதம் என்பதால் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும் பான்மை உள்ளது. எனவே அதிஷி முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றனர்.
- மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு.
இம்பால்:
மணிப்பூா் பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைவதற்கான சாத்தியம் இல்லாவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தோ்வு செய்வது தொர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் மணிப்பூா் பா.ஜ.க. பொறுப்பாளா் சம்பித் பித்ரா ஆலோசனை நடத்தினாா்.
இந்த கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவா்களாக கருதப்படும் மணிப்பூா் சபாநாகர் தோக் சோம் சத்யபத்ரா, மந்திரிகள் ஒய். கேம்சந்த், பசந்த் குமாா் சிங், கோவிந்தா கோந்தோ ஜம் . பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராதே ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் குகி இன பா.ஜ.க. எம்.எல்.ஏ.க் கள் 7 பேர் பங்கேற்கவில்லை. மேலும் மேலிட பொறுப்பாளர் சம்பித் பித்ரா நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்களுடனும் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் மற்றும் 3 மந்திரிகள், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.