என் மலர்
நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"
- 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.
அந்த வகையில் ஏஐ தொழிநுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது. வீடியோவில் உள்ளவரின் முகத்துடன் வேறு ஒருவரின் முகத்தை இணைத்து வீடியோவில் உள்ளவர் செய்யும் செயல்களை வேறு ஒருவர் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகத்தை விரசமான வீடியோக்களில் இணைத்து இணையத்தில் சிலர் உலாவ விடுகின்றனர்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து டீப் பேக்கின் அபாயம் குறித்து தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் ஆலியா பட் அலங்காரம் செய்துகொள்வது போல் 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மையில் அவை டீப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகை வாமியா காபியின் முகத்துடன் ஆலியா பட்டின் முகம் டீப் பேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடி, ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி நடிகை கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்ட பலரது டீப் பேக் வீடியோக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹவுசிங் சொசைட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டுள்ளார்.
மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் இருந்த கார் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டிக்குள் கடந்த ஜனவரி 20 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பின் பக்கமாக இருந்த சுவரை இடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், இதுதொடர்பான வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சுவரின் தரம் குறித்தும், ஓட்டுனரின் அலட்சியப்போக்கு குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வலப்புறமாக திரும்பிய போது கார் மீது அமர்ந்திருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது போன்று காட்சிகள் உள்ளது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகி விடுகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மாணவர்கள் சிலர் குழுவாக சேர்ந்து விருந்து கொண்டாடும் காட்சிகள் உள்ளது.
அப்போது பரபரப்பான சாலையில் அந்த மாணவர்கள் காரில் செல்கின்றனர். கருப்பு நிற உடையணிந்து ஸ்டைலாக காட்சி அளிக்கும் அந்த மாணவர்கள் கார் மீது அமர்ந்து பயணித்தனர். கார் வேகமாக சென்று வலப்புறமாக திரும்பிய போது கார் மீது அமர்ந்திருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது போன்று காட்சிகள் உள்ளது.
பின்னணியில் சிலர் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. ரீல்ஸ் வீடியோவுக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் விபத்தில் சிக்கியது போன்று தெரிகிறது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
நண்பர்கள் அல்லது சாலையில் செல்லும் பொது மக்களிடையே 'பிராங்க்' செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சில நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
அதில், பிலிப்பைன்சை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடையில் அமர்ந்து கொண்டு தனது உதடுகள் மீது கம் (பசை) ஒட்டி விளையாடுகிறார். விளையாட்டுத்தனமாக அவர் அந்த செயலை செய்த போது பசை இறுக்கமாக உதடுகளில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் அந்த வாலிபர் வாயை திறக்க முயற்சித்த போது அவரால் திறக்க முடியவில்லை.
இதனால் அவர் அழுது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. அதைப்பார்த்து அவரது நண்பர்கள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ 67 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், வாலிபர் உரிய பாடத்தை கற்று கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் என பதிவிட்டார்.
- இளம்பெண் விமானத்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளார்.
- விமானத்தை தவறவிட்டதற்கு கேப் டிரைவர் தான் காரணம் என குற்றம்சாட்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார்.
மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பொதுமக்கள் கேப் சர்வீஸ்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம்பெண் ஒருவர் கேப் டிரைவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் உள்ளது.
மும்பையை சேர்ந்த அந்த இளம்பெண் விமானத்தில் செல்ல முன்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவர் கேப் மூலம் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் விமானம் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னை அழைத்து வந்த கேப் டிரைவரை தாக்கி உள்ளார்.
வீட்டில் இருந்து புறப்படுவதற்கே தாமதமாகியதை ஏற்க மறுத்த இளம்பெண், விமானத்தை தவறவிட்டதற்கு கேப் டிரைவர் தான் காரணம் என குற்றம்சாட்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டனர்.
- வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன்கள் பலரும் ஷ்கோடலேராவின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், பணம் சம்பாதிப்பதற்காக விலங்குகளை பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், இதுபோன்று பாம்புகளை வைத்து விளையாட யார் அனுமதித்தார்கள்? இது மிகப்பெரிய தவறு என பதிவிட்டிருந்தார்.
- அந்த நபர் 500 ரூபாயை கொடுத்து சிறுவனிடம் இருந்து அப்பளங்களை கேட்டார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
ஏழ்மையின் காரணமாக சிறுவர்கள் பஜார்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் சிறு, சிறு வியாபாரம் செய்வதை பார்த்திருப்போம். அவ்வாறு கடற்கரையில் அப்பளம் விற்கும் ஒரு சிறுவன் தனது சுயமரியாதையை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், கடற்கரை ஒன்றில் அப்பளம் விற்கும் சிறுவனுடன் ஒருவர் உரையாடுவது போன்று காட்சிகள் உள்ளது. அப்போது தன்னிடம் பேசும் நபரிடம் சிறுவன், என்னால் இதுவரை அப்பளத்தை விற்க முடியவில்லை என்று கூறினான். உடனே அந்த நபர் சிறுவனிடம் இருந்து அப்பளத்தை வாங்குவதற்காக விலையை கேட்டார். அதற்கு சிறுவன், ஒரு பாக்கெட் ரூ.30 என கூறினான். அதற்கு அந்த நபர் அதை ரூ.5-க்கு தருமாறு கேட்கிறார். இதனால் சிறுவன் தயங்கிய போதும் சிறிது நேரம் கழித்து ஒப்புக்கொண்டான்.
பின்னர் அந்த நபர் 500 ரூபாயை கொடுத்து சிறுவனிடம் இருந்து அப்பளங்களை கேட்டார். இதனால் சிறுவன் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினாலும், தனது சுயமரியாதையை வெளிப்படுத்தினான். அதாவது அவர் கொடுத்த அதிகப்படியான பணத்தை ஏற்க மறுத்த சிறுவன், நான் வேலை செய்கிறேன். ஆனால் பிச்சை எடுப்பதில்லை என்றான். சிறுவனின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அந்த நபர், சிறுவனிடம் உனது குடும்ப செலவுக்காக இதனை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அவரது வற்புறுத்தலுக்கு பிறகு சிறுவன் பணத்தை ஏற்றுக்கொள்வது போன்று காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள்.
- குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
அசாம் மாநிலத்தின் கலாசார நடனமாக பிகு உள்ளது. பண்டிகையின்போது பாரம்பரிய உடையணிந்து வாலிபர்களும் இளம்பெண்களும் இணைந்து பிகு நடனம் ஆடுவார்கள். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா. பிகு நடன கலைஞரான இவர் தனது நடன வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமாக உள்ளார்.
இந்தநிலையில் பிரியங்கா புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது குழந்தையுடன் இணைந்து அவர் பிகு நடனமாடினார். பாரம்பரிய உடையணிந்த அந்த குழந்தை துள்ளலான இசைப்பாடலுக்கு தனது தாயுடன் சேர்ந்து கைகளை காற்றில் அசைத்தும் துள்ளி குதித்தும் உற்சாகமாக நடனமாடியது.
தாய்க்கு நிகராக ஈடுபாடுடன் ஆடிய அந்த குழந்தையை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் திருப்பதிபுரம் காலனியை சேர்ந்தவர் பிரஹ்லாத் சிங் கோஷி. இவர் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க காரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு நாய் மீது கார் மோதியது. இதில் நாய்க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தன் மீது மோதிய காரை பார்த்தும், காரை ஓட்டி சென்ற பிரஹ்லாத்தை பார்த்தும் நாய் குரைத்தது. பின்னர் சிறிது தூரம் காரை துரத்தியது.
இந்நிலையில் பிரஹ்லாத் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினார். மறுநாள் காரை பார்த்த போது, அதன் பானட்டில் ஏராளமான கீறல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது முதல் நாள் கார் மோதியதில் காயமடைந்த நாய் மேலும் ஒரு நாயுடன் அவரது வீட்டிற்கு வந்து கார் பானட்டை தனது நகங்களால் கீறும் காட்சிகள் இருந்தது.
சேதம் அடைந்த காரை சரி செய்ய ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் ஆனதாக கோஷி குறிப்பிட்டிருந்தார்.
- விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.
- விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார்.
திருமண விழாக்களின் போது சுவாரஸ்யமாக நடைபெறும் சில சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஹரித்துவாரை சேர்ந்த விவேக் குமார் என்பவர் தனது சொந்த திருமணத்தில் அர்ச்சகராக மாறி, வேத மந்திரங்கள் உச்சரித்த காட்சி உள்ளது.
ராம்பூர் பகுதியில் இருந்து மணமகன் ஊர்வலமாக ஹரித்துவார் வருவது போன்று வீடியோ தொடங்குகிறது. அங்கு மணமேடையில் விவேக் குமார் ஏறியதும் மணமகள் வருகிறார். பின்னர் மேடையில் விவேக் குமார் திருமண சடங்குகளை செய்கிறார்.
தனது திருமண விழாவில் அவர் வேத மந்திரங்களை உச்சரித்து சடங்குகளை நடத்தியதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். விவேக்குமார் பிளஸ்-2 முடித்த பிறகு வேத படிப்பை தொடர்ந்தார். ஆரிய சமாஜத்தின் மரபுகளுடான அவரது உறவு திருமணத்தின் போது மந்திரங்களை உச்சரிக்க தூண்டியதாக அவர் கூறினார்.
- அங்கரோன் பாடலுக்கு ஒரு வாலிபர் தனது பாட்டியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- என் ஸ்ரீவள்ளியுடன் என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சமீபத்தில் வெளியான 'புஷ்பா-2' படம் உலகளவில் மிகப்பெரிய ஹிட்டாகி ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற அங்கரோன் எனத்தொடங்கும் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூன்- ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கரோன் பாடலுக்கு ஒரு வாலிபர் தனது பாட்டியுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வயதான மூதாட்டி ஒருவர் அங்கரோன் பாடலுக்கு ராஷ்மிகாவை போன்று நடனமாடுகிறார். அவருடன் அவரது பேரன் இணைந்து நடனமாடும் காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.
என் ஸ்ரீவள்ளியுடன் என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அந்த பாட்டி மிகவும் அழகாக நடனமாடுகிறார் என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், வயது என்பது வெறும் எண் தான், மகிழ்ச்சி எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம் என பதிவிட்டார்.
- கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
- கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் உலகில் வளைகாப்பு விழாவும் பரிணாமம் அடைந்து அதனை விளம்பரத்திற்காக நடத்தும் அளவிற்கு வந்துவிட்டனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் வளைகாப்பு நிகழ்வுக்கு மாற்றாக நடத்தப்படும் விழாவில் சூட்டோடு சூடாக கருவின் பாலினத்தை அறிந்து கொள்ளும் வகையில் விளையாட்டு அல்லது வேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
அத்தகைய கொண்டாட்ட நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இங்கிலந்தை சேர்ந்தவர் ஏமி. பெண் தொழிலதிபரும் கோடீஸ்வரருமான இவா், காதலர் பிராட் என்பவரை கரம்பிடித்தார். தொடர்ந்து கர்ப்பம் அடைந்த நிகழ்வை கொண்டாடுவதற்காக பங்களா வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கருவின் பாலினத்தை அறிவிப்பதற்காக கலர் வண்ணப்பொடிகளால் ஆன உலர்பனிக்கட்டி (டிரை ஐஸ்) பயன்படுத்தப்பட்டது.
அப்போது அந்த அடர் பனிப்புகை வீடு முழுவதும் பரவியது. இதில் ஏமி உள்பட அறையில் இருந்த பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.