search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீலிஸ்"

    • உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள உமாரியா கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது 3 வயது மகன் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் லக்ஹிம்பூர் கேரி [Lakhimpur Kheri] மாவட்டத்தில் உள்ள உமாரியா[Umariya] கிராமத்தின் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அருகே உள்ள சீதாபூர் மாவட்டத்தின் லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த முகமது அகமது (26 வயது), அவரது மனைவி நஜ்னீன் (24 வயது) இன்று காலை 11 மணி அளவில் அவர்களது 3 வயது மகன் அப்துல்லாவுடன் உமாரியா கிராமத்தின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீலிஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரெயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். அவர்களது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
    • விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி பெரிய புள்ளிகளின் மகன்கள் விபத்து ஏற்படுத்தி உயிரிழப்புகளுக்க்கு காரணமாகும் சமபாவங்கள் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புனேவில் மதுபோதையில் தொழிலதிபரின் 17 வயது மகன் இயக்கிய போர்ச்சே சொகுசு கார் மோதி 2 இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

    மும்பையில் பாஜக கூட்டணி ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ரமேஷ் ஷாவின் மகன் குடிபோதையில் பி.எம்.டபில்யூ காரை இயக்கி ஏற்படுத்திய விபத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மதுபோதையில் 19 , 20 வயதுடைய 5 இளைஞர்கள்  சமூக  வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீலிஸ் செய்து கொண்டே காரை இயக்கி சாலையோரம் இருந்த வேலி மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் நடைபாதையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜூலை 11 அதிகாலை 2.38 மணியளவில் இந்த விபத்து நடந்த்துள்ளது. விபத்துக்கு முன் காரினுள் அந்த இளைஞர்கள் சத்தமாக பாட்டு கேட்டபடி  ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

    • உயிரிழந்த இளம்பெண் பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
    • பெண்ணை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

    கேரளாவில் தனது காதல் பிரேக் அப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மைனர் பெண் இன்ஸ்டாகிராம் இன்புலுயென்சர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ஆதித்யா நாயர் என்ற அந்த இளம்பெண் கடந்த வாரம் ஜூன் 10 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக  ஆதித்யாவை காதலித்து ஏமாற்றிய 21 வயதாகும் பினாய் என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். உயிரிழந்த  ஆதித்யா, பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

     

    ரீல்ஸ் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதித்யா 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதற்கிடையில் திடீரென இவர்களின் காதல் பிரேக் அப்பில் முடித்த நிலையில் பினாயின் இன்ஸ்ட்டாகிராம் ஃபாலோவர்கள் இணையத்தில் ஆதித்யாவை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

     

    இந்நிலையில் மைனரான தனது பெண்ணை பினாய் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி மயக்கி ஏமாற்றியதாகபெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் பினாய் மற்றும் உயிரிழந்த ஆதித்யாவின் மொபைல் போன்களை ஆராய்ந்ததன் மூலம் பினாய்க்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

    ×