search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி காங்கிரஸ்"

    • பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
    • பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.

    நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.

     

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.

    தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

    ×