என் மலர்
நீங்கள் தேடியது "அமைதிப் பேச்சுவார்த்தை"
- ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
- மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
2022 இல் தொடங்கிய உக்ரைன்- ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. நேற்று இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது.
குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் ரஷிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனர்.
- பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
- குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது தாக்குதல் நடந்தது.
- கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை நியமித்துள்ளார்.
நேற்று மற்றும் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்கள் உட்பட பல இடங்களைத் இஸ்ரேல் தாக்கியுள்ளது .
முவாசி மனிதாபிமான வலயத்தில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது அங்கு தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் மனிதாபிமான வலயத்தில் பதுங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் டெய்ர் அல்-பாலாவில் நடந்த மற்றொரு தாக்குதலில் உள்ளூர் பாதுகாப்புக் குழுக்களின் எட்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில், கான் யூனிஸில் ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் தனது சொந்த நோக்கங்களுக்காக உதவியைப் பயன்படுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீண்டும் மீண்டும் காசாவின் காவல்துறையை குறிவைத்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உதவி வழங்குவதில் தடையாக உள்ளது.
மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் மகாசியில் தெருவில் நடந்து சென்றபோது கொல்லப்பட்டனர். மகாசி மற்றும் நுஸ்ராத் அகதிகள் முகாம் உட்பட மத்திய காசாவில் நடந்த தாக்குதல்களில் நேற்று பிற்பகுதியிலும் இன்று அதிகாலையிலும் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை அங்கீகரித்துள்ளதற்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது.

மொசாட், ஷின் பெட் மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய தூதுக்குழு இன்று புறப்படும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 15 மாத கால மோதலில் அமெரிக்கா தலைமையிலான முந்தைய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வியடைந்தன.
- இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன.
- அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்றுடன் (பிப்ரவரி 24) ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக ரஷியா தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தை கூறி ரஷியா 2022இல் போரை தொடங்கியது.
இந்நிலையில் ரஷியா இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று ஒரே நாளில் ரஷியா 267 ட்ரோன்களை ஏவியது. இது இதுவரை உக்ரைன் மீது நடந்தேறாத மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் 13க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்தன. அவற்றில் கார்கிவ், பொல்டாவா, சுமி, கீவ், செர்னிஹிவ், மைகோலைவ் மற்றும் ஒடெசா ஆகியவை அடங்கும்.
உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறுகையில், ரஷியா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டன. இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரைனின் ஐந்து நகரங்களில் ரஷியா சேதம் விளைவித்தது.
இந்தத் தாக்குதலின் போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு பல ரஷிய ட்ரோன்களை அழித்தது. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் நடந்த மற்றொரு ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் அதிபர்ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷியா 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் 35 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதாக அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போருக்கு தீர்வு காண சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.