என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேற்கு நாடுகள்"
- சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
- 'மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்'
வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப் போராட்டம் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரலாக மாறியது.
14 ஆண்டுகால ஆட்சியை இரண்டே மாதங்களில் தூக்கியெறிய வைத்தது எது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.போராட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஜமாத்- இ- இஸ்லாமியின் பங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹசீனாவுடனான இந்தியாவின் நெருக்கம், சீனா உள்ளிட்ட நாடுகளை உறுத்துதலாக இருந்து வருவதையும் பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
மே 2024 இல் அவர் அளித்த அந்த பேட்டியில், வங்காள தேசத்தில் தங்களது நாட்டின் விமான படைத்தளத்தை அமைக்க அனுமதி அளித்தால் தன்னை மீண்டும் மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்' என்று ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால் எந்த புதிய விமான தளமும் வங்காள தேசத்தில் அமைக்கப்படவில்லை. தற்போது ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹசீனா வெள்ளை இன நபர் என்று குறிப்பிட்டது, மேற்கு நாடுகளை குறிக்கிறது என்றும் எனவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்கு நாடு ஒன்றின் சதி இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 முதல் ஆட்சியில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
- மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.
மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது.
ரஷியா உக்ரைன் இடையிலான போர் கடந்த 3 வருடங்களாக நடந்து வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான உயிரிழப்புகளும் உக்ரைன் பகுதிகளில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் உதவியுடன் இந்த போரில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது. ரஷியாவுக்கு வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
உக்ரைனை கைப்பற்றுவது தங்களின் நோக்கம் இல்லை என்று கூறும் புதின் மேற்கு நாடுகளால் உக்ரைன் வழியாக தங்களுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள ஸ்டெபோவா நோவோசெலிவ்கா [Stepova Novoselivka] iமற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நோவோபோக்ரோவ்ஸ்கே [Novopokrovske] ஆகிய இரண்டு கிராமங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால் உக்ரைன் ராணுவம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட பகுதிகளில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் உக்ரைன் தலைநகர் கார்கிவ் மீது ரஷியா தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்