search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகி கொலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
    • ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல் நாடு மாவட்டம், விணு கொண்டாவை சேர்ந்தவர் ஷேக் ரஷீத் (வயது 25). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இளைஞரணி நிர்வாகி.

    இவர் முண்டலா முரு பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    கடந்த தேர்தலுக்கு முன்பு இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேர்தலின் போது ஷேக் ரஷீத், ஷேக் ஜிலானி வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை தீ வைத்து எரித்தார்.

    இதனால் ஷேக் ரஷீத் மீது ஜிலானிக்கு கடும் ஆத்திரம் உண்டானது.

    நேற்று இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

    அங்கு வந்த ஷேக் ஜிலானி தான் வைத்திருந்த கத்தியால் ரஷீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை துண்டாகி விழுந்தது. ரஷீத் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார்.

    அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டும் பார்த்தனர். ஒருவரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜிலானி அங்கிருந்து தப்பி சென்றார்.

    அருகில் இருந்தவர்கள் ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ரஷீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷேக் ரஷீத் வெட்டி கொல்லப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் உள்ளது.

    • அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக நிர்வாகி கொலை தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சண்முகம் கொலை தொடர்பாக 55வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் லாட்டரி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
    • சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது.

    சென்னை:

    சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.

    * தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.

    * கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

    * சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது.

    * சண்முகத்தை இழந்துவாடும் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×